துருக்கியை தொடர்ந்து நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. கலக்கத்தில் பொதுமக்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்புயல் மற்றும் வெள்ளத்தால் ஏற்கனவே பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் நியூசிலாந்தில் சுத்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது மக்களை கலக்கமடைய செய்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த ஆறாம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. 7.8 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கம் மொத்த துருக்கியையும் ஸ்தம்பிக்க செய்திருக்கிறது. துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பம் காரணமாக இதுவரையில் 35 ஆயிரம் பேர் இறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் நாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நியூசிலாந்தின் ஆக்லாந்து மற்றும் நேப்பியர் போன்ற இடங்களில் கேப்ரியல் புயல் காரணமாக பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன் அருகே 6.1 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலநடுக்கம் தொடர்பாக ஐரோப்பிய மத்திய தரக் கடல் நில அதிர்வு மையம் (EMSC) வெளியிட்ட தகவலின் படி வெலிங்டனுக்கு அருகில் உள்ள லோயர் ஹட்டிலிருந்து வடமேற்கே 78 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
மேலும், இது 48 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாகவும் இதன் மையம் பராபரமு நகரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் நியூசிலாந்து நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர் சேதமோ பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரையில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Images are subject to © copyright to their respective owners.
கடந்த வாரம் துருக்கி மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் சேதத்தினை நிலநடுக்கங்கள் ஏற்படுத்திய நிலையில் தற்போது நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டு இருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Earthquake confirmed by seismic data.⚠Preliminary info: M6.1 || 78 km NW of Lower Hutt (New Zealand) || 5 min ago (local time 19:38:07). Follow the thread for the updates👇 pic.twitter.com/QLRK4EGfmz
— EMSC (@LastQuake) February 15, 2023
மற்ற செய்திகள்