'ஏம்மா.. இப்படியாமா பண்ணுவீங்க.. பாருங்க ஜட்ஜே அப்செட் ஆயிட்டாரு'.. பெண் செய்த பரபரப்பு காரியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் அதிபருக்கு பெரும் பத்திரிகைகள் முன்னிலையில், ஒரு அவப்பெயர் இருக்கிறது. அதன்படி கருத்துச் சுதந்திரத்தை அவரும் அவரது தலைமையிலான அரசும் பொறுத்துக்கொள்வதில்லை என்கிற விமர்சனம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தது.

'ஏம்மா.. இப்படியாமா பண்ணுவீங்க.. பாருங்க ஜட்ஜே அப்செட் ஆயிட்டாரு'.. பெண் செய்த பரபரப்பு காரியம்!

அதன் ஒரு பகுதியாக சமூக வலைதள எழுத்தாளரும், ஆர்வலருமான ஸ்டெல்லா நியான்ஸி அரசின் குறைகளையும், 74 வயதான உகாண்டாவின் அதிபர் முசேவேனியின் போக்கை அவ்வப்போது கண்டித்தும் காட்டமாக தனது வலைப்பக்கத்தில் எழுதிவந்தார். ஆனால் சில சமயம் அவரது விமர்சனங்கள் அரசின் பார்வையில் வரம்புமீறுவதாக கருதப்பட்டது.

அதோடு நில்லாத நியான்ஸி அதிபரை பிசிக்கலாக தரம் தாழ்த்தி, தன்னுடைய கருத்தினை தகாத முறையில் வெளிப்படுத்தியதால் அவருக்கு சிறை தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து உரிமை இயக்கங்களின் துணைகொண்டு அரசு அநீதியுடனும், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான தன்மையுடனும் செயல்பட்டு வருவதாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் நீதிமன்றத்தில் காணொளி வழியாக ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஏன் இவ்வாறு பேசினார்  என்று கேட்டபோது, தான் இவ்வாறு நீதிமன்றத்தின் முன்னிலையில் குற்றவாளியாக நிற்கவைக்கப்படுவதே, இந்த அரசின் கொடுங்கோல் ஆட்சியின் ஒரு அம்சம்தான் என்று கூறியுள்ளார்.

எனினும் அவரது மேற்கொண்ட இந்த கருத்து விமர்சனங்கள் அரசுக்கெதிராக இருந்ததாகவும், அதிபரை தரக்குறைவாக பேசியதாகவும் அவருக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையும் பொறுக்காத நியான்ஸி, காணொளி மூலமாகவே இந்தத் தீர்ப்பை எதிர்க்கும் வகையில், தான் அணிந்திருந்த மேலாடையைக் கழட்டி, தனது அங்கங்களைக் காண்பித்து எதிர்ப்பை வெளிப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

UGANDA, VIRAL, BIZARRE, RIGHTS, WOMAN, COURT