'ஐயோ என் நாடு இப்படி போகுதே'... 'துரத்திய மனஅழுத்தம்'...ஜெர்மனியை புரட்டி போட்டுள்ள சோகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், கடும் மனஅழுத்தத்தில் இருந்த ஜெர்மனியில் உள்ள ஹெஸ்சி மாநில நிதி மந்திரியின் மரணம் ஜெர்மனியை கடும் சோகத்தில் தள்ளியுள்ளது.

'ஐயோ என் நாடு இப்படி போகுதே'... 'துரத்திய மனஅழுத்தம்'...ஜெர்மனியை புரட்டி போட்டுள்ள சோகம்!

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே தற்போது முடங்கியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மருத்துவர்கள் கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறார்கள். மறுபக்கம் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

ஜெர்மனியில் உள்ள ஹெஸ்சி மாநிலத்தின் நிதி மந்திரி தாமஸ் ஸ்கிபெர், சரிந்துள்ள பொருளாதாரத்தை எப்படி சீர் செய்யலாம் என்பது குறித்து கடுமையாக உழைத்து வந்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அதனை எப்படி சரி செய்வது என்பது குறித்து தாமஸ் ஸ்கிபெர் கடுமையான யோசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தனது கண் முன்பே நாடு இப்படி பொருளாதார சரிவைச் சந்தித்து வருகிறதே என கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தச்சூழ்நிலையில் நேற்று அவரது உடல் ரயில் தண்டவாளம் அருகில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் ஜெர்மனியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் நிதி மந்திரி தாமஸ் ஸ்கிபெரின் திடீர் மரணம் குறித்துப் பேசிய ஹெஸ்சி மாநிலத்தின் முதல்வர் வால்கர் பவ்ஃபியர், ''தாமஸ் ஸ்கிபெர் உயிரிழந்தது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

அவர் எப்போதும் பொருளாதாரத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். தனது கண் முன்பே நாடு இப்படி நிலைகுலைந்து போகிறதே என கடும் வருத்தத்திலிருந்த போதும், அதற்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். இந்த தருணத்தில் ஆவர் எங்களுடன் இருந்திருக்க வேண்டும்'' என உருக்கத்துடன் கூறியுள்ளார்.

CORONA, CORONAVIRUS, SUICIDEATTEMPT, FINANCE MINISTER, THOMAS SCHäFER, HESSE REGION, கொரோனா