"பிரபலங்கள் சேர்ந்து ஒரே வீட்டில் வாழும் ரியாலிட்டி ஷோ!"... மனமுடைந்த '22 வயது' ரெஸ்லிங் வீராங்கனை எடுத்த 'சோக' முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜப்பானைச் சேர்ந்தவர் ஹனா கிமுரா (22). இவரது தாய் க்யோகோ கிமுரா பிரபல ரெஸ்லிங் வீராங்கனை ஆவார். அவரைத் தொடர்ந்து ஹனா கிமுராவும், ரெஸ்லிங் உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். பின்னர் ஸ்டார்டம் ரெஸ்லிங் என்கிற நிறுவனத்துடன் இணைந்து ஜப்பான் புரோ ரெஸ்லிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவந்த அவர், மிக வேகமாக ஜப்பானில் பிரபலமான ரெஸ்லிங் வீராங்கனையாக வளர்ந்தார்.
எனினும் விரைவில் ஜப்பானின் பெரிய புரோ ரெஸ்லிங் நிறுவனத்தில் சேர்ந்துவிடுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த நிலையில் அவர் ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். ஜப்பான் கலாச்சாரத்தை சேர்ந்த 6 பிரபலங்கள் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ வேண்டும். கிட்டத்தட்ட நம்மூர் பிக்பாஸ் நிகழ்ச்சி போன்ற அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது முதலே கடும் எதிர்ப்பை சந்திக்க தொடங்கிய ஹனா, அந்த நிகழ்ச்சியில் செய்தவற்றை சர்ச்சைக்குரிய வகையில் இணையதளவாசிகள் பேசத் தொடங்கினார். இதனால் மனமுடைந்த ஹனா கிமுரா, விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள மனமின்றி, இந்த 22 வயதிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பதற்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராமில், “உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும், மகிழ்ச்சியாக இரு.. என்னை மன்னித்துவிடு” என்று கடைசியாக பதிவிட்டுள்ளார்.
இதனை அடுத்து ட்விட்டரிலும், தினமும் தன்னைப் பற்றி குறைந்தது 100 கருத்துக்களாவது வருவதாகவும், இதனால் தான் காயமடைந்ததாகவும், தான் ஏறக்குறைய இறந்தேவிட்டதாகவும், தனக்கு ஒரு அம்மாவை கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றியும் தெரிவித்த ஹனா, வாழ்க்கையில் தன் விருப்பபடி வாழ வேண்டும் என்று நினைத்ததாகவும், தான் பலவீனமாக இருப்பதாகவும் தன்னை மன்னித்துவிடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்