காபூலில் கட்டுக்கட்டாக சிதறிக் கிடந்த பேப்பர்.. ‘அது என்னன்னு எடுத்து பாருங்க’.. அய்யோ இதையா இப்படி போட்டு போனாங்க.. ஷாக் ஆன அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்காபூல் விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 13 அமெரிக்க படை வீரர்கள் உட்பட 90 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு உலக நாடுகள் பலவும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
முன்னதாக தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதும், மக்கள் பலரும் அங்கிருந்து வெளியேறி மற்ற நாடுகளுக்கு தஞ்சம் புகுந்தனர். அதேபோல் ஆப்கானில் இருந்த பல நாடுகளின் தூதரக அதிகாரிகளும் தாயகம் திரும்ப தகவல் அளிக்கப்பட்டது. மேலும் அந்நாடுகளின் தூதரங்களும் காலி செய்யப்பட்டன.
அந்த வகையில் காபூலில் இருந்த இங்கிலாந்து அதிகாரிகள் வெளியேறியபோது அங்கு பணியாற்றிய ஆப்கானியர்கள் தொடர்பான ஆவணங்களை அப்படியே விட்டுவிட்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சிதறிக் கிடந்த ஆவணங்களை எடுத்துப் பார்த்தபோது, இங்கிலாந்து தூதரகத்துக்காக பணியாற்றிய ஆப்கானியர்கள் 7 பேரின் விவரங்கள் இருந்ததாக தி டைம்ஸ் ஊடகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இதனை அடுத்து தி டைம்ஸ் செய்தியாளர்கள் அதை இங்கிலாந்து வெளியுறவு அதிகரிகாரிகளிடம் வழங்கியதை அடுத்து, 3 ஆப்கானியர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காபூலில் நிலைமை மோசமடைந்ததால், முக்கிய ஆவணங்களை அழிக்க அனைத்து முயற்சிகளும் எடுத்தும் முடியவில்லை என இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்