‘விமான வீல்களில் சிக்கிய ஊழியருக்கு நேர்ந்த கதி’.. சோகத்தில் மூழ்கிய கேரள குடும்பம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கேரளாவைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் குவைத் விமான நிலையத்தில், குவைத் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் போயிங் 777 விமான சக்கரத்தில் மாட்டியதால் பலியான சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘விமான வீல்களில் சிக்கிய ஊழியருக்கு நேர்ந்த கதி’.. சோகத்தில் மூழ்கிய கேரள குடும்பம்!

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த, 36 வயது ஆனந்த் ராமச்சந்திரன், 2008-2009ஆம் ஆண்டு முதல் குவைத் ஏர்வேஸின் தொழில்நுட்பப் பிரிவு ஊழியராக பணிபுரிபவர். இவர் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் 4-வது முனையத்தில் இருந்து விமானத்தை, அதன் நிறுத்துமிடத்துக்கு எடுத்துச் செல்வதை பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது விமானத்தின் அடிசக்கரத்தில் துரதிர்ஷ்டவசமாக சிக்கிய ஊழியர், பரிதாபமாக பலியாகியதாக குவைத் ஏர்வேஸ் தெரிவித்தது. இதனையடுத்து, அவரது பிரேதம் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் நிலையில், அவருக்கு நேர்ந்த இந்த விபத்து குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆனந்த்தின் தாய், தந்தை, மனைவி, மகள் உள்ளிட்ட நெருக்கமான உறவினர்கள் யாவரும் தீரா சோகத்தில் மூழ்கியுள்ளனர். இவர்களுக்கு பல தரப்பில் இருந்தும் பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

KERALA, SAD, KUWAIT