LIGER Mobile Logo Top
Tiruchitrambalam Mobile Logo Top

எதே.. 3 மாம்பழம் 10 லட்சம் ரூபாயா..? ஏலத்துல வந்த போட்டி.. இலங்கையில் நடந்த சுவாரஸ்யம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கையில் 3 மாம்பழங்களை 10 லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கியிருக்கிறார் அங்குள்ள தமிழர் ஒருவர். இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

எதே.. 3 மாம்பழம் 10 லட்சம் ரூபாயா..? ஏலத்துல வந்த போட்டி.. இலங்கையில் நடந்த சுவாரஸ்யம்..!

Also Read | கூட்டத்துல தந்தையை தொலைத்த மகன்.. கண்ணீர்விட்ட சிறுவனுக்காக ஒன்று திரண்ட மக்கள்.. வாவ் சொல்லவைக்கும் வீடியோ..!

ஏலம்

பல கோவில் திருவிழாக்களில் ஏலம் விடும் நிகழ்வு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. சாமிக்கு படைக்கும் ஆடைகள், பழங்கள், சிறப்பு பூஜை பொருட்கள் ஆகியவற்றை கோவில் நிர்வாகத்தினர் பொதுமக்கள் முன்னிலையில் ஏலத்துக்கு கொண்டுவருவர். மனதில் வேண்டுதலுடன் இந்த பொருட்களை வாங்க பலரும் முன்வருவது உண்டு. இப்படி ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமாக ஏலம் நடைபெறும். அதேபோல, ஏலத்தில் விடும் பொருட்களும் வேறுபடும். அந்த வகையில் இலங்கையில் உள்ள விநாயகர் கோவிலில் சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் கலந்துகொண்ட தமிழர் ஒருவர் 3 மாம்பழங்கள் மற்றும் ஒரு மாலையை 10 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்.

Srilankan man buys 3 mangoes in temple auction at 10 lakh rupees

விநாயகர் கோவில்

இலங்கையின் வவுனியா மாவட்டம் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ளது சித்தி விநாயகர் கோவில். இங்கு அலங்கார திருவிழா உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற இந்த சித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதில் விநாயகருக்கு மாம்பழ மாலை அணிவிக்கப்பட்டது. அதன்பிறகு சாமி ஊர்வலம் நடைபெற்றிருக்கிறது.

இறுதியாக பிள்ளையாருக்கு சாற்றிய மாம்பழம் மற்றும் மாலை ஆகியவை ஏலத்துக்கு வந்தது. இதை வாங்க ஏராளமானோர் போட்டிபோட்டனர். ஆயிரங்களில் துவங்கிய இந்த ஏலம் லட்சக்கணக்கில் எகிறியது. இதனால் மக்கள் கூட்டமே அதிர்ந்துபோனது. இறுதியில் அந்த மாம்பழங்களை வாங்கப்போவது யார்? என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. 9.7 லட்சத்துக்கு 3 மாம்பழங்கள் மற்றும் மாலை ஏலம் கேட்கப்பட்டிருந்த நிலையில் 10 லட்ச ரூபாய்க்கு அதை வாங்க ஏலம் கேட்டிருக்கிறார் உள்ளூர் தமிழரான மோகன்குமார்.

10 லட்ச ரூபாய்

இதன்படி மூன்று மாம்பழங்கள் மற்றும் மாலை ஆகியவை மோகன்குமாருக்கு வழங்கப்பட்டது. கோவிலுக்கு ஏற்கனவே வேண்டுதல் இருந்ததால் அதன் காரணமாகவே இவ்வளவு தொகை செலவழித்து இதனை வாங்கியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஏலத்தில் பெற்றுக்கொண்ட ஒரு மாம்பழத்தை ஆலயத்தில் வைத்து, பக்தர்களுக்கு பகிர்ந்தளித்த பின்னர் ஏனைய இரண்டு மாம்பழங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார் மோகன்குமார். மேலும், இந்த மாம்பழங்களின் விதைகளை தனது தோட்டத்தில் விதைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Also Read | உடனடியா அந்த பட்டியலை ரெடி பண்ணுங்க.. 15 நாள் டைம்.. MLA-களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்.. முழுவிபரம்.!

SRILANKA, MANGO, TEMPLE AUCTION, SRILANKAN MAN BUYS 3 MANGOES

மற்ற செய்திகள்