'இந்த மேட்டர தென்னை மர உச்சியில வச்சு...' 'மக்கள் கிட்ட சொன்னா தான் கரெக்ட்டா இருக்கும்...' - தென்னை மரத்தில் ஏறிய 'அந்த' நாட்டு அமைச்சர்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இலங்கையில் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது என்ற உண்மையை மக்களிடம் தெரிய வைப்பதற்காக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தென்னை மரத்தில் ஏறி பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அமைச்சராக இருப்பவர் அருந்திகா பெர்னாண்டோ. இவர், நேற்று வராகபோலா என்ற பகுதிக்கு சென்று, நாட்டில் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது என்ற உண்மை செய்தியை மக்களிடம் தெரிவிப்பதற்காக தென்னை மரம் ஒன்றின் உச்சிக்கு கடகடவென ஏறியுள்ளார். மரத்தின் உச்சியில் இருந்து அமைச்சர் பேசியதாவது, உள்ளூர் தொழிற்சாலைகளின் தேவை மற்றும் மக்களின் பயன்பாடு அதிகரிப்பு காரணத்தினால், இலங்கையில் 700 மில்லியன் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது. கிடைக்கும் வெற்று இடங்களை, தென்னை மரங்கள் நடுவதற்கு பயன்படுத்தி கொள்வோம். நாட்டில் அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் இந்த தென்னை துறைக்கு ஊக்கம் அளிப்போம். நாட்டில் பற்றாக்குறை காரணமாக தேங்காயின் விலை உயர்ந்துள்ளது. இதனை குறைக்க உடனே நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
தேங்காய் பற்றாக்குறை குறித்து மக்களிடம் தகவலை தெரிவிக்க தென்னை மரத்தில் ஏறிய அமைச்சரின் இந்த செயல், நல்ல பலனையும், தேங்காய் பற்றாக்குறை குறித்த விழிப்புணர்வையும் கொடுத்துள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மற்ற செய்திகள்