இலங்கை வரலாற்றுலயே இவ்வளவு ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனையானது கிடையாது..நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த விலை உயர்வு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கை அரசு வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இலங்கை வரலாற்றுலயே இவ்வளவு ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனையானது கிடையாது..நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த விலை உயர்வு..!

Also Read | "பயமா இருக்குப்பா..!"... இந்தியாவையே உலுக்கிய "விஸ்மயா" வழக்கு கடந்து வந்த பாதை.!

பொருளாதார நெருக்கடி

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலையும் விண்ணை தொட்டுள்ளது. அரிசி, பிரெட், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், உணவு பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் தினந்தோறும் பல மணி நேரம் மின்வெட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Sri Lanka hikes fuel prices amid economic crisis

வரலாறு காணாத விலையேற்றம்

இலங்கை அரசு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெட்ரோல் விலையை 24.3 சதவீதமும், டீசல் 38.4 சதவீதமும் உயர்த்தியுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு பிறகு இலங்கை அரசு இரண்டாம் முறையாக எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. இதன்மூலம் Octane 92 பெட்ரோல் 420 இலங்கை ரூபாய்க்கும் (1.17 அமெரிக்க டாலர்) மற்றும் டீசல் 400 ரூபாய்க்கும் (1.11 அமெரிக்க டாலர்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலையேற்றம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் இலங்கையில் அமலுக்கு வந்திருக்கிறது. இதன்மூலம் Octane 92 பெட்ரோல் 82 ரூபாயும் டீசல் 111 ரூபாயும் விலையேற்றத்தை சந்தித்துள்ளன. இது இலங்கை வரலாற்றில் கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய விலை உயர்வாகும். இந்த விலை உயர்வு குறித்த அறிவிப்பை சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது.

Sri Lanka hikes fuel prices amid economic crisis

பாதிப்பு

இதனை தொடர்ந்து இலங்கையில் இயங்கிவரும் இந்தியன் ஆயில் நிறுவனமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளன. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போதைய நிலையில் ஆட்டோ ஓட்டுனர்கள் முதல் கிலோமீட்டருக்கு 90 ரூபாயும், அதற்கு பிறகான கிலோமீட்டர் ஒன்றுக்கு 80 ரூபாயும் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பக்கத்தில்,"எரிபொருள் விலை இன்று அதிகாலை 3 மணி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை உறுப்பினர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்ட அளவில் எரிபொருளின் விலையானது உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி, சரக்கு விநியோகம் மற்றும் வரி ஆகியவற்றிலும் மாற்றம் இருக்கும்" என அறிவித்துள்ளார்.

Sri Lanka hikes fuel prices amid economic crisis

ஏற்கனவே நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், அரசு வரலாறு காணாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்தியது இலங்கை மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

தொண்டையில் சிக்கிய உணவு.. துடிச்சுப்போன காவலர்.. உயிரை காப்பாற்றிய சப் இன்ஸ்பெக்டர்..

Nenjuku Needhi Home
SRI LANKA, FUEL PRICES, ECONOMIC CRISIS, SRI LANKA HIKES FUEL PRICES

மற்ற செய்திகள்