”சீனாவின் பொறிக்குள் சிக்கிட்டாங்க'... 'இலங்கைக்கு வரப்போகும் மிகப்பெரிய அழிவு”...' பீதியை கிளப்பிய தகவல்'... வெளிவந்த உண்மை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கையில் விரைவில் உணவுத்தட்டுப்பாடும், பஞ்ச நிலைமையும் உருவாகும் என்ற தகவல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

”சீனாவின் பொறிக்குள் சிக்கிட்டாங்க'... 'இலங்கைக்கு வரப்போகும் மிகப்பெரிய அழிவு”...' பீதியை கிளப்பிய தகவல்'... வெளிவந்த உண்மை!

இலங்கை சீனாவின் கடன் சுமையில் சிக்கிப் பல பொருளாதார அழிவுகளைச் சந்திக்கப் போவதாகவும், இலங்கையில் விரைவில் உணவுத்தட்டுப்பாடும், பஞ்ச நிலைமையும் உருவாகும் என்றும், இலங்கை அரசு விரைவில் அப்படியான சூழலை எதிர்கொள்ளப் போவதாகவும் கடந்த சில தினங்களாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்த தகவல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Sri Lanka food and forex crisis: Here’s all you need to know

இந்நிலையில் இந்த தகவல் குறித்துப் பேசிய இலங்கையின் நிதி மூலதனச் சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், ''இலங்கை இன்னும் சில மாதங்களில் உணவுப் பஞ்சத்திற்கும், கடன்சுமைக்கும் வீழ்ந்துவிடும் என ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் கடந்த நாட்களில் வெளியிடப்பட்டிருந்தன. சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளதால் நாட்டில் நிதி மற்றும் உணவு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் எனச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது அடிப்படையற்றது,” என்றார்.

மேலும், “கோவிட் தாக்கத்தினால் இலங்கை மட்டுமல்ல, பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த எத்தனையோ நாடுகள் பொருளாதார ரீதியிலேயே ஏதோவொரு முறையில் பாதிக்கப்பட்டுள்ளன. எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டிற்குள் உணவுத்தட்டுப்பாடோ, ஏனைய தட்டுப்பாடுகளோ ஏற்படாது என்பதை உறுதிப்படக் கூறுகின்றேன். தற்சமயம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருக்கின்றன,” என்று கூறினார்.

Sri Lanka food and forex crisis: Here’s all you need to know

அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முழுவீச்சாக நடவடிக்கை எடுத்து வருவதோடு எதிர்காலத்தில் இப்படியான நிலைமை வராதபடிக்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன'' என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்