cadaver Mobile Logo Top
Viruman Mobiile Logo top

ஒரே ஒரு புரளி.. நகரத்தை விட்டு மொத்தமா வெளியேறுன மக்கள்.. 60 வருஷமா யாருமே அந்த பக்கம் போகல.. கடைசில தான் அந்த உண்மை தெரிஞ்சிருக்கு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஸ்பெயினில் ஒரு வதந்தியை நம்பி மக்கள் தாங்கள் வசித்துவந்த நகரத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். 60 வருடங்களுக்கு பின்னர் தான் உண்மையே மக்களுக்கு தெரியவந்திருக்கிறது.

ஒரே ஒரு புரளி.. நகரத்தை விட்டு மொத்தமா வெளியேறுன மக்கள்.. 60 வருஷமா யாருமே அந்த பக்கம் போகல.. கடைசில தான் அந்த உண்மை தெரிஞ்சிருக்கு..!

கைவிடப்பட்ட நகரம்

சுற்றுலாவாசிகளின் விருப்பத்துக்குரிய இடமாக திகழ்கிறது ஐரோப்பா. இதமான காலநிலை, பழங்கால கட்டிடங்கள், எழில்கொஞ்சும் கடற்கரைகள் என உலக சுற்றுலா பயணிகளை பெருமளவில் ஈர்த்துவருகின்றன ஐரோப்பிய நாடுகள். இங்கே வரும் பயணிகளை திகைப்பில் ஆழ்த்தக்கூடியவை இங்குள்ள கைவிடப்பட்ட நகரங்கள். இப்படி ஐரோப்பா முழுவதும் பல நகரங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு பின்னால் பல சுவாரஸ்ய கதைகளும் இருக்கும். பொதுவாக பேய் போன்ற மாயாஜால விஷயங்களை நம்பி இந்த நகரங்களை மக்கள் கைவிட்டதாக அந்த கதைகள் இருக்கும்  ஆனால், ஸ்பெயினில் உள்ள ஒரு நகரம் ஒரு வதந்தியால் மக்களால் கைவிடப்பட்டது. உண்மை தான்.

ஸ்பெயினின் மத்திய மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது கிரானடில்லா நகரம். 9 ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் இந்த நகரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். இங்கே வசிக்க துவங்கிய அவர்கள் வேளாண்மையில் ஈடுபட மெல்ல மெல்ல குடியேற்றங்களும் அதிகரித்திருக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் நகரம் மக்களிடையே பிரபலமானதாக மாறியிருக்கிறது. அதனை சுற்றி 17 நகரங்களும் உருவாகியிருக்கின்றன.

வெளியேற்றம்

ஆனால், காலங்கள் செல்ல செல்ல மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். 1950 களில் இந்த பகுதியில் வசித்த மக்களின் எண்ணிக்கை சில ஆயிரம் தான். ஆனால், அடுத்த 17 வருடங்களுக்கு உள்ளாக அங்கிருந்த மக்கள் அனைவரும் முழுவதுமாக வெளியேறிவிட்டனர். இதற்கு காரணம் ஸ்பெயினை அப்போது ஆண்டுவந்த  பிரான்சிஸ்கோ பிராங்கோ (Fransisco Franco) என்னும் சர்வாதிகாரிதான்.

அதாவது, பிரான்ஸிஸ்கோ அப்பகுதியில் கேப்ரியல் ஒய் காலன் எனும் நீர்த்தேக்கத்தை கட்டினார். அதன் நீர்ப்பிடிப்பு பகுதிக்குள் இந்த நகரம் இருந்ததால் இங்கே இருக்கும் மக்களை வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டிருக்கிறது. காலங்காலமாக வாழ்ந்துவந்த மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருக்கிறார்கள். ஆனால், நீர்த்தேக்கம் கட்டப்பட்டுவிட்டால் மொத்த நகரமும் நீருக்குள் மூழ்கிப்போகும் என்பதால் மக்கள் அனைவரும் அப்பகுதியை காலி செய்திருக்கிறார்கள்.

வதந்தி

இப்படி மனிதர்களே இல்லாத நகரமாக மாறியிருக்கிறது கிரானடில்லா. ஆனால், அரசு எச்சரிந்தபடி இந்த நகரம் மூழ்கவில்லை. ஏனென்றால் அணை அமைந்திருந்த இடத்தை காட்டிலும் இந்த பகுதி மேடாக இருந்ததால் இந்நகரம் பாதுகாப்பாகவே இருந்திருக்கிறது. இது வெளியுலகத்துக்கு தெரியவரவே கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. நீர்த்தேக்க கட்டுமான பணியின்போது இந்த நகரத்திற்கு வரும் வழிகளும் தகர்க்கப்பட்டிருக்கின்றன. தற்போது ஒரே ஒரு சிறிய பாதைமட்டுமே இந்த நகரத்தை வெளியுலகத்துடன் இணைக்கிறது. இன்றும் இந்த நகரத்தில் யாரும் வசிக்கவில்லை. சுற்றுலாவாசிகள் இந்த நகரத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

SPAIN, GRANADILLA, ABANDONED, TOWN, கிரானடில்லா, ஸ்பெயின், கைவிடப்பட்ட நகரம்

மற்ற செய்திகள்