VIDEO : அலைச்சறுக்கு விளையாடிய 'பெண்'... அதிகாரிகளுடன் நடந்த 'வாக்குவாதம்'... 'கைது' செய்த 'போலீசார்'... அதிர்ச்சி தரும் 'பின்னணி'... நடந்தது 'என்ன'??
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அனைத்து உலக நாடுகளும் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
இந்நிலையில், ஸ்பெயின் (Spain) நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆனால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் ஸ்பெயினின் வடக்கே சான் செபாஸ்டியன் (San Sebastian) என்னும் பகுதியில் உள்ள கடற்கரைக்கு நீர் சறுக்கு விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இதனையறிந்து அங்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள், அந்த பெண்ணை கரைக்கு வரும்படி அழைத்துள்ளனர். ஆனால், நீண்ட நேரமாக கரைக்கு திரும்பாத பெண், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக, அவரை போலீசார் உதவியுடன் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியும், மக்கள் வைரஸின் அபாயத்தை உணராமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்