'கடலில் நீச்சலடித்து வந்த அகதி'... 'இப்படி ஒரு சம்பவம் நடக்க போகுதுன்னு யாரும் நினைக்கல'... கண்களை குளமாக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒரே ஒரு புகைப்படம் பலரது கண்களைக் குளமாக்கியுள்ள நிலையில், மனிதம் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது.

'கடலில் நீச்சலடித்து வந்த அகதி'... 'இப்படி ஒரு சம்பவம் நடக்க போகுதுன்னு யாரும் நினைக்கல'... கண்களை குளமாக்கும் சம்பவம்!

மொரோக்கோவுடன் எல்லையைப் பகிரும் ஸ்பெயின் நாட்டின் சியூட்டா நகரில் கடல் மற்றும் தரை வழியாக ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைகின்றனர். கடலில் நீச்சல் அடித்தும், தரைவழியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரைத் தாண்டியும் அகதிகள் ஸ்பெயின் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வருகின்றனர்.

Spain showing the human side of the migrant crisis in Spain

அவ்வாறு அத்துமீறி நுழைபவர்களைத் தடுக்கும் விதமாக சியோட்டா நகரின் எல்லையில் ஸ்பெயின் தனது இராணுவத்தைக் களமிறக்கியுள்ளது. கடல் மற்றும் நிலம் வழியாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் அகதிகள் உடனடியாக பிடிக்கப்பட்டு மீண்டும் மொரோக்கோ நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றனர். தற்போதுவரை ஸ்பெயின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அகதிகள் 6 ஆயிரம் பேர் மொரோக்கோ நாட்டிற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

Spain showing the human side of the migrant crisis in Spain

இந்நிலையில் மொரோக்கோவில் இருந்து கடல்வழியாக அகதி ஒருவர் நீச்சல் அடித்து ஸ்பெயின் எல்லைக்குள் நுழைந்துள்ளார். கடலில் நீச்சல் அடித்து ஸ்பெயின் கரையை வந்தடைந்த அந்த அகதி உடல் வலிமையிழந்து கடற்கரையில் சுருண்டு விழுந்துள்ளார். அப்போது, அங்கு தன்னார்வ பணிகளை மேற்கொண்டிருந்த லூனா ரியஸ் தன்னார்வல பெண்மணி கடற்கரையில் விழுந்த அந்த அகதிக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து, அந்த அகதியை அணைத்து ஆறுதல் கூறினார்.

Spain showing the human side of the migrant crisis in Spain

அப்போது அந்த அகதியின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக ஓடியது. அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் மனிதம் இன்னும் இறக்கவில்லை. இதுபோன்ற மனிதர்கள் மூலம் உயிர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்