"Tie கட்டுறத நிப்பாட்டுங்க.." வித்தியாசமாக ஐடியா கொடுத்த ஸ்பெயின் பிரதமர்.. எதுக்காக அப்டி பண்ண சொன்னாரு??
முகப்பு > செய்திகள் > உலகம்புவி வெப்ப மயமாதல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த சில ஆண்டுகளாகவே ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் சராசரி வெப்ப நிலை உயர்ந்த வண்ணமே இருக்கிறது.
அது மட்டுமில்லாமல், இதன் காரணமாக, பல இடங்களில் காட்டுத் தீ பரவலும் அதிகமாக இருந்து வருகிறது.
இதனைத் தடுக்கவும் அந்நாட்டு அரசுகள் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மறுபக்கம் , தொடர்ந்து அதிக வெப்ப நிலையால் ஐரோப்பாவிலுள்ள மக்களும் கடுமையாக அச்சுறுத்தி வருகின்றனர்.
இதில், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில், காட்டுத் தீ பரவல் பிரச்சனை தொடர்ந்து நிலவும் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்படத்தில் இருந்து வெளியேறும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. மேலும், ஸ்பெயின் நாட்டில் 30 டிகிரிக்கு குறைவாகவே அதிகபட்ச வெப்ப நிலை இருந்து வந்த நிலையில், இந்தாண்டு 45.7 டிகிரி ஆகவும் வெப்ப நிலை பதிவாகி உள்ளது.
ஐரோப்ப நாடுகளில் வெப்பத்தினை எதிர்கொள்ள அரசும், மக்களும் சில யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அப்படி ஒரு சூழ்நிலையில், ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தன் நாட்டு மக்களுக்கு அசத்தலான ஐடியா ஒன்றையும் சொல்லி, அதனை பின்பற்றவும் அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய பெட்ரோ, "நான் இப்போது டை அணிவதில்லை. ஏனென்றால், அதன் மூலம் நமது ஆற்றலை நாம் சேமிக்க முடியும். எனவே, அனைத்து அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் இனிமேல் டை அணிவதை தவிரக்க வேண்டும். தனியார் நிறுவன ஊழியர்களும் இதனை பின்பற்றுவார்கள்" என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
டை அணிந்து காலரை இறுக்கமாக வைத்திருந்தால், ஏசி அல்லது பேன் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அளவு அதிகம் தேவைப்படும் என்பதால், டை கட்டுவதை தவிர்ப்பதன் மூலம், மின்சார ஆற்றலை கொஞ்சமாவது சேமிக்க முடியும் என்ற ஒரு விஷயத்தில் தான் ஸ்பெயின் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்குள், நூற்றுக்கு மேற்பட்டோர் வரை வெப்ப அலை காரணமாக, அங்கே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மற்ற செய்திகள்