Video: என்ன ஃபோர்ஸ்...! ‘செவசெவன்னு வயலுக்குள்ள போய் கலக்குது...’ ‘ஒரு ஓட்டை விழ போய்...’ - கடைசில இப்படி ஆயிடுச்சே...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஸ்பெயின் தேசத்தில் மதுபானத் தயாரிப்புக் கம்பெனியில் ஐம்பதாயிரம் லிட்டர் ஒயின் வீணாகி உள்ளது.

Video: என்ன ஃபோர்ஸ்...! ‘செவசெவன்னு வயலுக்குள்ள போய் கலக்குது...’ ‘ஒரு ஓட்டை விழ போய்...’ - கடைசில இப்படி ஆயிடுச்சே...!

அந்த மது ஆலையில் உள்ள கொள்கலனில் ஏற்பட்ட சிறு ஓட்டையால் 50 ஆயிரம் லிட்டர் சிவப்பு ஒயின் ஆறாக ஓடி வீணானது.

வில்லமாலியா என்ற இடத்தில் இயங்கி வரும் மதுபானத் தயாரிப்பு ஆலையில், மிகப் பெரிய ராட்சஸ கொள்கலன்களில் சிவப்பு நிற ஒயின் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன.

அப்போது, சிவப்பு ஒயின் வைக்கப்பட்டிருந்த கொள்கலனில் திடீரென ஏற்பட்ட ஓட்டையால் அதில் இருந்த ஒயின் கீழே கொட்டியது. சிவப்புநிற வெள்ளப்பெருக்கு போன்று வேகம் எடுத்த சிவப்பு ஒயின் சாலையெங்கும் ஓடி கடைசியில் அருகில் இருந்த வயலில் கலந்து அனைத்தும் வீணானது.

 

மற்ற செய்திகள்