வானத்தில் தோன்றிய ஜெல்லி மீன் போன்ற வடிவம்.. திகைத்துப்போன பொதுமக்கள்.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஜெல்லி மீன் போன்ற உருவம் வானத்தில் தோன்றியது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ஸ்பேஸ் எக்ஸ்
தொழிலதிபரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-ஐ நிர்வகித்து வருகிறார். இந்த நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவுடன் இணைந்து பல்வேறு திட்டங்களில் பணியாற்றி வருகிறது. இவற்றுள் முக்கியமான திட்டமாக பார்க்கப்படுகிறது ஸ்டார்லிங் திட்டம்.
ஸ்டார்லிங்
உலகம் முழுவதும் குறைந்த விலையில், அதிவேக இணைய சேவையை வழங்கும் நோக்கில் எலான் மஸ்க் துவங்கிய திட்டம் தான் ஸ்டார்லிங். இந்த திட்டத்தின்படி, 2000 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி, அதன்மூலம் அதிவேக இணைய சேவையை வழங்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனிடையே கடந்த 6 ஆம் தேதி, 53 செயற்கை கோள்களை விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்.
புளோரிடா மாகாணத்தில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டில் இந்த 53 செயற்கை கோள்களும் பூமியின் வெளிவட்டப் பாதைக்கு அனுப்பப்பட்டன.
ஜெல்லி மீன்
செயற்கை கோள்களை சுமந்தபடி ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்த போது, வானில் ஜெல்லி மீன் போன்ற வடிவம் தோன்றியது. ராக்கெட்டின் எக்ஸாஸ்ட் பகுதியில் வெளியேறிய புகை, வளிமண்டல மேலடுக்கின் மீது பரவிய விதம் ஜெல்லி மீன் போலவே இருந்திருக்கிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசிப்பவர்கள் இந்த அரிய காட்சியை கண்டிருக்கின்றனர். மேலும், மக்கள் இதனை புகைப்படம் எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட, தற்போது அப்புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.
செயற்கை கோள்கள் ஏவப்பட்ட சில மணி நேரங்களுக்கு முன்பாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிசெய்துவந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆறு மாத பயிற்சி முடித்து பூமிக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
From Lady Lake! pic.twitter.com/ztUg1w0RN4
— Amanda (@AmandaJuneM) May 6, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்