இது கொரோனா 'சீசன்'ல... "காத்துலேயே 'வேகமா' பரவுதாம்"... "நமக்கு எதுக்கு வம்பு"ன்னு... 'ரூபாய்' நோட்டுகளை வாஷிங் 'மிஷின்'ல போட்டு... சுத்தம் செஞ்ச 'நபர்'!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் கொரோனா கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக பொது இடங்களுக்கு சென்று வரும் மக்கள் வீட்டிற்கு திரும்புகையில் தங்களது கை, கால்களை சானிடைசர் அல்லது சோப் மூலம் சுத்தம் செய்து கொண்டு வீட்டிற்குள் நுழைகின்றனர்.

இது கொரோனா 'சீசன்'ல... "காத்துலேயே 'வேகமா' பரவுதாம்"... "நமக்கு எதுக்கு வம்பு"ன்னு... 'ரூபாய்' நோட்டுகளை வாஷிங் 'மிஷின்'ல போட்டு... சுத்தம் செஞ்ச 'நபர்'!!

இந்நிலையில், தென் கொரியா நாட்டில் சியோல் என்னும் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சுமார் 50 ஆயிரம் வான் (இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரம் ரூபாய்) தனது குடும்பத்தினர் ஒருவரின் இறுதி சடங்கு சமயத்தில் அவருக்கு கிடைத்துள்ளது. பல உறவினர்கள் கொடுத்த பணத்தினை ஒன்றாக அவர் வைத்திருந்துள்ளார். காற்றிலேயே கொரோனா அதிக நேரம் இருக்கும் என கருத்து பரவலாக உள்ள நிலையில், உறவினர்கள் தந்த பணத்திலும் கொரோனா இருக்குமோ என அவர் அஞ்சியுள்ளார்.

இதனால், அந்த பணத்தில் கொரோனா இருந்தால் அதனை போக்குவதற்காக வாஷிங் மிஷினில் போட்டு சுத்தம் செய்துள்ளார். இதில், பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் சேதமடைந்து போயுள்ளது. அவர் பதறிப் போன நிலையில் உடனடியாக வங்கியில் இந்த பணத்தை மாற்றுவது குறித்து விசாரித்துள்ளார். ஆனால், அதிக ரூபாய் நோட்டுகள் சேதமடைந்துள்ளதாலும், மொத்த பணம் எவ்வளவு என சரிவர தெரியாததன் காரணமாக பணத்தை மாற்ற முடியாது என வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன் இதே போன்று, தென் கொரியாவை சேர்ந்த ஒருவர் கொரோனா அச்சத்தினால் பணத்தினை மைக்ரோ ஓவனில் வைத்து சுத்தம் செய்து அனைத்து பணமும் கருகிப் போனது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்