'தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மாஸ்க் போட வேண்டாம்'... 'அதிரடியாக அறிவித்த நாடு'... உற்சாகத்தில் மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான ஆயுதம் என்பதைப் பல நாடுகள் தீவிரமாக வலியுறுத்தி வருகிறது.

'தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மாஸ்க் போட வேண்டாம்'... 'அதிரடியாக அறிவித்த நாடு'... உற்சாகத்தில் மக்கள்!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பிலிருந்து 15 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஜூலை மாதத்திலிருந்து மாஸ்க் அணியத் தேவையில்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு டோஸ் எடுத்துக்கொண்டாலும் மாஸ்க் அணியத் தேவையில்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இத்தகைய அறிவிப்பை தென்கொரியா வெளியிட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

South Koreans no longer need masks outdoors if vaccinated

அதேபோல், ஜூன் மாதத்திலிருந்து ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்  கூட்டமாகக் கூட அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5.2 கோடி மக்கள் தொகை கொண்ட தென்கொரியாவில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 70 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி போட்டு விட வேண்டும் என தென்கொரியா திட்டம் வகுத்துள்ளது. தற்போது அந்நாட்டில் வெறும் 7.7 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

South Koreans no longer need masks outdoors if vaccinated

70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, தனிமைப்படுத்தலுக்கான விதிகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் அந்நாட்டு அதிபர் கிம் பூ கியும்  தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 707- பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 37 ஆயிரமாக உள்ளது. தொற்று பாதிப்பால்  1,940- பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற செய்திகள்