“117 சீன வீரர்களின் உடல் பாகங்களை” .. 70 ஆண்டுகளுக்கு பிறகு .. ஒப்படைத்த நாடு!.. அப்படி என்ன நடந்துச்சு?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரிய தீபகற்ப போரில் பலியான 117 சீன படை வீரர்களின் சடலங்கள் 70 ஆண்டுகளுக்கு பிறகு தென் கொரியாவில் இருந்து சீனாவுக்கு அனுப்பப்பட்டு உரிய நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 1950-ம் ஆண்டுவாக்கில் வடகொரியா தென்கொரியா இடையே 3 ஆண்டு காலம் நிலவிய போரில் தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வடகொரியாவுக்கு எதிராக சோவியத் யூனியன் உள்ளிட்ட நாடுகளும் இருந்தன. இந்தப் போரில் சுமார் 5 லட்சத்திற்கும் மேலான வீரர்கள் பலியாகினர். சுமார் 25 லட்சத்துக்கு மேலான மக்கள் இரு நாடுகளிலும் அகதிகளாக மாற வேண்டிய சூழல் உண்டானது. இந்த போரின் விளைவால் சுமார் 70 ஆண்டுகளாக தென் கொரியாவுக்கும் சீனாவுக்கும் பகை நிலவுகிறது.
இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அந்த போரில் இறந்த வீரர்களின் சடலங்களை ஒப்படைப்பதாக கடந்த 2014 ஆம் ஆண்டு தென் கொரியா கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி கொரியப் போரில் உயிரிழந்த 599 சீன வீரர்களின் உடல்களை கடந்த 7 ஆண்டுகளாக சீனாவுக்கு அனுப்பி வைத்துக் கொண்டு வருகிறது தென் கொரியா.
அத்துடன் உயிரிழந்தவர்களுக்கு சொந்தமான 1368 உடமைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது 117 சீன வீரர்களின் எஞ்சிய உடல் பாகங்களை தென் கொரியா நேற்றைய தினம் சீனாவிற்கு அனுப்பி வைத்துள்ளது. அவ்வாறு சீனாவிற்கு வந்த சீன வீரர்களின் உடல் பாகங்கள் சீனாவிலுள்ள ஷென்யான் நகரிலுள்ள பூங்காவொன்றில் பொதுமக்கள் முன்னிலையில் ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டன.
மற்ற செய்திகள்