'நம்பர் லாக் போட்டுட்டா...' என்னால வீட்டுக்குள்ள நுழைய முடியாதா...? பூனை செய்த 'வேற லெவல்' சம்பவம்...! - அசந்துப்போன வீட்டு ஓனர்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வளர்ப்புபிராணிகள் பல நேரங்களில் மனிதர்களை விட புத்திசாலியாகவும், மனிதர்களுக்கே டிமிக்கி கொடுக்கும் வேலைகளை செய்யும். அதுபோன்ற ஒரு பூனை செய்யும் திருட்டுதானமான செயலை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

'நம்பர் லாக் போட்டுட்டா...' என்னால வீட்டுக்குள்ள நுழைய முடியாதா...? பூனை செய்த 'வேற லெவல்' சம்பவம்...! - அசந்துப்போன வீட்டு ஓனர்...!

பொதுவாகவே நாய்கள் தான் இருக்கும் வீட்டின் உரிமையாளருக்கு, அவர்கள் காட்டும் அன்பை விட அதிகமாகவே திருப்பி கொடுக்கும். ஆனால் பூனைக்களோ அந்த வீட்டின் எஜமானர்கள் போல் நடந்துகொள்ளும். அதோடு பூனைகள் மிகவும் புத்திசாலிகள். உருவம் சிறிது என்றாலும் புலிகளுக்கு நிகரான திறமை பெற்றவை.

அதுவும் பூனைகள் திருட்டுத்தனமாக ஜன்னல் வழியாகவோ, திறந்திருக்கும் முன்பக்க, பின்பக்க கதவுகள் வழியாகவோ  வீட்டிற்குள் நுழைந்து மீன் போன்றவற்றை சாப்பிடும்.

ஆனால், தென்கொரியாவில் ஒரு பூனை நேரடியாக வீட்டு கதவை திறப்பதற்கான ரகசிய எண்களை போட்டு உள்ளே நுழைகிறது. இந்த வீடியோ வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி  உள்ளது.

இந்த பூனை அந்த வீட்டு உரிமையாளர் வளர்க்கும் பூனை இல்லை. தெருவில் சுற்றிதிரியும் இது, உணவு கிடைக்காத நேரத்தில் இந்த பூனை, அங்குள்ள வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது.

வீட்டின் உரிமையாளர் கதவை திறப்பதற்கு ரகசிய எண்கள் கொண்ட டோர்லாக் கருவியை பொருத்தி இருந்தாலும், அந்த ரகசிய எண்களை பூனை எப்படிதான் தெரிந்து கொண்டு இந்த வேலையை செய்து வருகிறது.

கிட்டத்தட்ட தினமும் 20 முறையாவது தன் வீட்டுக்கு வருவதாக அந்த வீட்டின் உரிமையாளர் தெரிவிக்கிறார். தற்போது வெளிவந்த வீடியோவில் அந்த பூனை, அழகாக தனது காலால் டோர்லாக் கருவில் உள்ள ரகசிய எண்களை அழுத்துகிறது. கதவு திறந்ததும் உள்ளே சென்று, வேண்டியதை சாப்பிட்டு விட்டு செல்வது பதிவாகியுள்ளது.

வீட்டின் உரிமையாளர் விரட்டியடித்த போதிலும், மீண்டும் மீண்டும் அதேபோல் செய்கிறது. ஒரு கட்டத்தில், ரகசிய எண்களை பூனை அழுத்துவதை தடுப்பதற்காக, டோர்லாக் கருவின் மீது லேமினேஷன் அட்டையை உரிமையாளர் பொருத்தினார். அதையும் நகங்களால் கிழித்து விட்டதாக கூறுகின்றனர் வீட்டின் உரிமையாளர்கள்.

முதலில் பூனையின் இந்த சேட்டையை கண்டு கடுப்பனாலும் தற்போது  உரிமையாளர் மனைவி, பின்னர் பூனையின் புத்திசாலித்தனத்தை பார்த்து அதன் மீது அன்பு செலுத்தினார். அதோடு, இந்த பூனையை சட்டப்படி தத்தெடுத்து, 'டவே பர்ன்' என்று பெயரும் சூட்டியுள்ளார்.

மற்ற செய்திகள்