'மொதல்ல எனக்கு மட்டும் தான் தெரியும்...' இப்போ 'விஷயம்' காட்டுத்தீ போல பரவி... - ஊரே ஒண்ணுக்கூடி மண்வெட்டி, கடப்பாரையோடு வந்து குவிஞ்சிட்டாங்க...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தென் ஆப்பிரிக்க நாட்டின் குவாசுலு-நடால் மாகாணத்தில் அமைந்துள்ள குவாஹ்லதி கிராமத்தில் மக்கள் ஒரே ஆரவாரமாக காணப்படுகின்றனர். இதற்கு காரணம் அங்கிருக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுக்கூடி வைர கற்களை தேடி வருவது தான்.

'மொதல்ல எனக்கு மட்டும் தான் தெரியும்...' இப்போ 'விஷயம்' காட்டுத்தீ போல பரவி... - ஊரே ஒண்ணுக்கூடி மண்வெட்டி, கடப்பாரையோடு வந்து குவிஞ்சிட்டாங்க...!

குவாஹ்லதி கிராமத்தில் சமவெளியில் பள்ளம் தோண்டிய போது அந்த பள்ளத்தில் பார்ப்பதற்கு பளபளவென வெள்ளை நிறத்தில் பூமிக்குள் இருந்து கற்கள் கிடைத்துள்ளது.

இதைப்பார்த்த 27 வயது இளைஞர் மெண்டோ சபெலோ அந்தக் கற்களை சேகரிக்க தொடங்கியுள்ளார். இதுகுறித்து கூறும் அவர், 'முதலில் அது கிரிஸ்டல் கற்களை போல இருந்தது. இது எப்படியோ செவி வழியாக கேள்விப்பட்ட எங்க ஊரு மக்கள், நான் பள்ளம் எடுத்த நிலப்பகுதிக்கு வந்து கற்களை தேடி வருகின்றனர்.

எனக்கு நிலையான வேலை கிடைக்காததால், கிடைக்கின்ற வேலையை செய்து வருகின்றேன். எங்கள் ஊரில் என்னை போலவே பல இளைஞர்கள் உள்ளனர்.

நிச்சயம் இந்த கற்கள் உடன் நான் வீடு திரும்பினால் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்படுவார்கள்' எனக் கூறியுள்ளார்.

அதோடு, இது எங்கள் வாழ்க்கையில் கிடந்துள்ள தடை கற்களை மாற்ற வந்த படிக் கற்கள். இது வைரம் என நம்புகிறோம். நம்பிக்கை தானே எல்லாம் என உள்ளூர் மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். மக்கள் தாங்கள் சேகரித்த வைரத்தை 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பனையும் செய்ய தொடங்கி உள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்நாட்டின் அரசு, வைரம் இருப்பதாக சொல்லும் அந்த பகுதிக்கு, கனிமவள வல்லுனர்கள் குழுவை ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாம். அவர்கள் ஆய்வு முடிவை பொறுத்தே அது வைரமா என்பது தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா நாடு பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பதால் மக்கள் தங்கள் வாழ்வாதரத்திற்காக ஒரே நேரத்தில் மக்கள் திரளாக குவிந்து வருகின்றனர். மேலும் இந்த நிகழ்வு, கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்