“இது ஆரம்ப நிலை தான்”!.. ஓமிக்ரான் பற்றி முதன்முதலாக எச்சரித்த மருத்துவர் சொன்ன ‘முக்கிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் குறித்து முதல்முதலாக எச்சரித்த தென் ஆப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோயட்சி முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த சூழலில் ஓமிக்ரான் (Omicron) என்ற உருமாறிய புதிய வகை கொரானா வைரஸ் பரவ தொடங்கியது அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த ஓமிக்ரான் வகை வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இரண்டு பேருக்கு ஓமிக்ரான் வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் தனிமைப்படுத்தி, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஓமிக்ரான் வகை வைரஸ் குறித்து முதல்முதலில் எச்சரித்த தென் ஆப்பிரிக்க மருத்துவ சங்கத் தலைவர் ஏஞ்சலிக் கோயட்சி (Angelique Coetzee) முக்கிய தகவல் பகிர்ந்துள்ளார். அதில், ‘தற்போதுள்ள சூழலில் பாதிப்பு குறைவாகதான் இருக்கும். இதன் வீரியம் குறித்து வரும் காலங்களில்தான் தெரிய வரும். ஓமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் சோர்வு, தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
ஓமிக்ரான் வைரஸ் பரவல் மிதமான அளவே இருப்பதால், அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இது ஆரம்ப நிலைதான், போகப்போகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பொறுத்து இதன் வீரியத்தன்மை தெரியவரும். அதே சமயம் ஓமிக்ரான் குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ஓமிக்ரான் வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது’ என ஏஞ்சலிக் கோயட்சி முயற்சி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்