'அந்த நாட்டுல தான் எங்கள விட...' புதிய வகை கொரோனா பயங்கர ஸ்பீடா பரவுது...' - பிரிட்டனுக்கு பதிலடி கொடுத்த நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

புதிய உருமாற்றத்துடன் தென் ஆப்பிரிக்காவில் பரவிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவிவரும் வைரஸை காட்டிலும் அதிக ஆபத்தானது என பிரிட்டன் கூறியிருப்பதை, தென் ஆப்பிரிக்கா மறுத்துள்ளது.

 

'அந்த நாட்டுல தான் எங்கள விட...' புதிய வகை கொரோனா பயங்கர ஸ்பீடா பரவுது...' - பிரிட்டனுக்கு பதிலடி கொடுத்த நாடு...!

கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கிட்டத்தட்ட  8 கோடி பேருக்கு மேல் பரவியுள்ளது. இன்னும் 2020-ஆம் ஆண்டு கொரோனா வைரசிற்கே இன்னும் மருந்து கண்டிக்கப்படாத நிலையில் தற்போது உருமாற்றம் அடைந்து புதிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதாக உலகநாடுகள் தெரிவிக்கின்றன.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ், முந்தைய வைரஸ் வகையைக் காட்டிலும் 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை வேகமாக பரவும் தன்மை கொண்ட உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவதாக வந்த புதிய செய்தி பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்துவதாக அமைந்தது.

அதுமட்டுமில்லாமல் இதுகுறித்து கூறிய பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் மேட் ஹான்காக், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்ட வைரஸை விட தொற்றும் தன்மை அதிகம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்கா இந்த அறிவிப்பிற்கு முற்றிலும் மறுத்துள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்கா சுகாதார அமைச்சர் ஸுவெலினி மெக்கிஸ், இங்கு கண்டறியப்பட்டுள்ள 501.V2 வகை வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு நோய் கடுமையாகும் என்பதற்கோ, அவர்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகம் என்பதற்கோ, எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றார்.

மற்ற செய்திகள்