'நள்ளிரவு முதல் மது விற்பனைக்கு தடை!!!'... 'புதிய வகை வைரஸ் அச்சத்தால்'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!!!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

புதிய வகை கொரோனா வைரஸ் அச்சத்தால் தென்னாப்பிரிக்காவில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

'நள்ளிரவு முதல் மது விற்பனைக்கு தடை!!!'... 'புதிய வகை வைரஸ் அச்சத்தால்'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!!!'...

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக அனைத்து நாடுகளும் விழிப்புணர்வுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் தொடர்ச்சியாக பல நாடுகள் இங்கிலாந்திற்கான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

South Africa Bans Alcohol Sales Requires Masks As Virus Spikes

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்தில் இருந்து தென்னாப்பிரிக்கா வந்த ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் மதுபானங்கள் விற்பனைக்கு நேற்று நள்ளிரவு முதல் அந்நாடு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்