MKS Others

'ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஓமிக்ரானைக் கண்டு அச்சப்படும் நிலையில்...' - WHO விஞ்ஞானி வெளியிட்ட முக்கிய தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஓமிக்ரானை சமீபத்தில் தான் கண்டுபிடித்துள்ளோம், அதற்குள்ளாக உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வகை வைரஸ் குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியாது என உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

'ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஓமிக்ரானைக் கண்டு அச்சப்படும் நிலையில்...' - WHO விஞ்ஞானி வெளியிட்ட முக்கிய தகவல்...!

உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன மாநாடு ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் ஓமிக்ரான் வைரஸ் குறித்து கூறுகையில்,

ஓமிக்ரான் தீவிரமான வகையாக மாறுமா என்று இப்போதே சொல்ல முடியாது. மிகவும் பரவக்கூடியதாக உள்ளது என்பது உண்மை. தென் ஆப்ரிக்காவில் தினசரி பாதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது.

Soumya Swaminathan says no need to be panic of Omicron

ஆனால், இந்த வைரஸை நாம் எதிர்கொள்ள தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அதே நேரம் பயப்படாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

உலக அளவில் 99 சதவீத நோய்த்தொற்றுக்கு டெல்டா வகை வைரஸ் தான் காரணம். இந்த உருமாறிய வைரசும் அதிகம் பரவக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனாலும் தற்போது உறுதியாக கணித்து சொல்ல முடியாது. நாம் சிறிது காலம் காத்திருந்து தான் முடிவுக்கு வரவேண்டும் என கூறியுள்ளார்.

SAWMIYA SWAMINATHAN, WHO, OMICRON

மற்ற செய்திகள்