பேஸ்புக் மூலம்.. தாயின் மறைவு பற்றி தெரிந்து கொண்ட மகன்.. மனம் நொறுங்க வைத்த 'பின்னணி'!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாயார் இறந்த தகவலை பேஸ்புக் பதிவு மூலம் மகன் தெரிந்து கொண்ட நிலையில், அதன் பின்னால் உள்ள விஷயங்கள் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பேஸ்புக் மூலம்.. தாயின் மறைவு பற்றி தெரிந்து கொண்ட மகன்.. மனம் நொறுங்க வைத்த 'பின்னணி'!!

Also Read | 'Divorce' ஆனதற்கு பெண் வைத்த 'Party'.. அடுத்த நாள் காலையில் வந்த மெசேஜ்.. "அதோட அவங்க வாழ்க்கையே மாறி போச்சு.."

கெவின் சிம்ப்சன் என்ற 52 வயது நபர் ஒருவர், நாட்டிங்ஹாம்ஷயரில் வசிக்கும் தனது 75 வயதான தாய் கில்லியானிடம் இருந்து வழக்கமான தொலைபேசி அழைப்புகள் வரவில்லை என்பதால், அதிகம் கவலை அடைந்துள்ளார்.

இது தொடர்பாக, தனது தாயின் பக்கத்து வீட்டில் உள்ள அவரது தோழி ஒருவர், கெவினுக்கு அழைத்து, உனது தாயார் தற்போது வாக்கிங் வருவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனால், கெவினுக்கு அதிகம் பயம் எழத் தொடங்கவே, உடனடியாக தனது தாயார் வீட்டுக்கும் சென்று பார்த்துள்ளார். அங்கே, அவரது தாய் இல்லை என கூறப்படுகிறது. அதே போல, கில்லியானின் நாய் மற்றும் அவரது காரும் அங்கே இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. உடனடியாக, தாய் அடிக்கடி வாக்கிங் செல்லும் பகுதிக்கும் சென்ற தேடி பார்த்துள்ளார் கெவின். அங்கே, அவரது தாயின் பெயரை சொல்லி கத்தி கத்தி பார்த்தும் யாரும் பதில் அளிக்கவில்லை.

தொடர்ந்து, வீட்டிற்கு திரும்பிய கெவின், அப்பகுதியில் உள்ள மக்களுக்கான பேஸ்புக் பக்கத்தில், வயதான பெண் ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டதாக பதிவு ஒன்றை பார்த்துள்ளார். அதன் பின்னர் தான், அது தனது தாயாரான கில்லியான் என்பது கெவினுக்கு தெரிய வந்தது. இதனால், அவர் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்து போனார்.

son find out mom dead through facebook make him sad

முன்னதாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கெவினின் தாயார் ஆன கில்லியான், தனது நாயுடன் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது ஒரு பகுதியில் வைத்து அவர் திடீர் என மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலையும் போலீசார் மீட்டுள்ளனர். ஆனால், இறந்தவரின் மகனான கெவினுக்கு இது தொடர்பாக போலீசார் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் facebook பதிவு ஒன்றின் மூலம் தனது தாயார் இறந்த செய்தியை அறிந்ததால், கெவின் மிகவும் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளானார்.

தாயாரின் மரணம் குறித்து பேசிய கெவின், தாயார் இறந்த தகவலை தான் அறிந்த பின்னரே போலீசார் அதனை என்னிடம் அறிவிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது தாயார் இறந்து இத்தனை நாட்களுக்கு பிறகு தனக்கு தெரிந்த விஷயம் தன்னை மிகவும் வேதனைக்கு ஆளாக்கியதாகவும் கெவின் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக போலீசார் தரப்பில் இருந்து, தவறாக தகவல்களை பரிமாற்றம் செய்து, தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளனர்.

Also Read | "கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்க.." கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகை & அமைச்சர் ரோஜா.. "இப்டி கூட சாதனை பண்ணலாமா??"

FACEBOOK, SON, MOTHER, MOTHER DEAD, பேஸ்புக், மகன்

மற்ற செய்திகள்