'பயமா இருக்கு, இப்படியே விட்டா...' 'ஏற்கனவே நிறைய வாட்டி 'ட்ரை' பண்ணினோம், ஆனால்...' 'இத' பண்ணி முடிச்சிட்டீங்கன்னா உங்களுக்கு பரிசு காத்திட்டு இருக்கு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தோனேசியாவில் முதலை ஒன்றின் கழுத்தைச் சுற்றியுள்ள மோட்டார் சைக்கிள் டயரைக் கழற்றுபவருக்குப் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'பயமா இருக்கு, இப்படியே விட்டா...' 'ஏற்கனவே நிறைய வாட்டி 'ட்ரை' பண்ணினோம், ஆனால்...' 'இத' பண்ணி முடிச்சிட்டீங்கன்னா உங்களுக்கு பரிசு காத்திட்டு இருக்கு...!

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ளது பலு நகரம். மத்திய சுலவேசியின் தலைநகரான இது பலு ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் கடந்த வாரம் காணப்பட்ட முதலையின் கழுத்தில் மோட்டார் சைக்கிளின் டயர் சிக்கியிருந்தது.

கடந்த 2018ம் ஆண்டின் அப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. அந்த சமயத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த டயர் முதலையின் கழுத்தில் சிக்கியிருக்கலாம் என கண்டறியப்பட்டது. இந்த செய்தி மத்திய சுலவேசி இயற்கை வளங்கள் பாதுகாப்பு நிறுவனத்தின் கவனத்திற்கு வரவே, ஒரு சில ஊர்வன வல்லுநர்கள் மூலம் அந்த டயரை எடுக்க முயற்சிக்கப்பட்டது.

எனினும், டயரை அகற்றும் முயற்சியில் அதிகாரிகள் தோல்வியுற்றனர். ஆனால் முதலை மூச்சுவாங்கச் சிரமப்படும் காட்சிகள் இணையத்தில் பரவ, அது இறந்துவிடுமோ என்ற அச்சம் தற்போது நிலவிவருகிறது.

முதலையைக் காப்பாற்றும்படி மத்திய சுலவெசி ஆளுநர் கூறிய நிலையில், வெற்றிகரமாக முதலையை விடுவிப்பவருக்கு பணம் வழங்கப்படும் என்று வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு பரிசு என்பதை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

CROCODILE, TYRE