Naane Varuven M Logo Top
PS 1 M Logo Top

72 வருஷம் முன்னாடி காணாம போன ராணுவ வீரர்.. இத்தனை நாள் கழிச்சு குடும்பத்தினருக்கு கிடைத்த பரபரப்பு தகவல்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த 72 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ராணுவ வீரர் குறித்த செய்தி, இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது தெரிய வந்துள்ளது.

72 வருஷம் முன்னாடி காணாம போன ராணுவ வீரர்.. இத்தனை நாள் கழிச்சு குடும்பத்தினருக்கு கிடைத்த பரபரப்பு தகவல்!!

Also Read | தோட்டத்தில் குழி தோண்டிய நபர்.. உள்ளே தெரிஞ்ச மர்ம சுவர்.. காரணம் தெரிந்ததும் உறைஞ்சு போயிட்டார்.!

கடந்த 1950 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் US-ல் உள்ள Massachusetts பகுதியை சேர்ந்த Joseph J. Puopolo என்ற ராணுவ வீரர், போர் முகாமில் இருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது.

கொரியன் போரில் இருந்து ஜோசப்பின் பிரிவு பின் வாங்கிய முடிவு செய்த நிலையில், அதில் அவர் ஒரு பீரங்கி வீரராக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, கடந்த 1953 ஆம் ஆண்டு போர் முகாம்களின் கைதியாக இருந்தவர்களின் கூற்றுப்படி, ஜோசப் 1951 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே உயிரிழந்து இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. கொரியன் போருக்கு பிறகு, இரு தரப்பினரும் உடல்களை மாற்றிக் கொண்டு தனிநபர்களை அடையாளம் கண்டு கொண்டனர். ஆனால், அடையாளம் கண்டு கொள்ள முடியாதவர்கள் உடல், Honolulu என்னும் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஜோசப் குறித்து விவரம் எதுவும் தெரியாததால், அவரது குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாமல் இருந்த உடல்கள் மீண்டும் தோண்டப்பட்டு, DNA மற்றும் மானுடவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அப்படி இருக்கையில், அடையாளம் தெரியாமல் கடந்த 72 ஆண்டுகளுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட ஜோசப்பின் உடலும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்டது.

இத்தனை வருடங்கள் கழித்து ஜோசப் உடல் கிடைத்துள்ளதால், அவரது குடும்பத்தினர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். மேலும், அடுத்த மாதம் ஜோசப்பின் உடலை அவரது குடும்பத்தினர் முறையாக அடக்கம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

soldier missing during korean war accounted after 72 years

ஜோசப்பின் சகோதரியான எலிசபெத் என்பவருக்கு தற்போது 99 வயதாகிறது. தனது சகோதரனுக்கு என்ன நடந்தது என்பதை அறிய 72 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஜோசப்பின் பேரனான கிரஹாம் இது பற்றி பேசுகையில், "எனது தாத்தாவை பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் ஒரு போர் வீரன் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் அவரை கண்டுபிடிப்போம் என நாங்கள் நம்பினோம். ஆனால், எங்களது பாட்டி இதுவரை இருப்பார் என நாங்கள் கருதவில்லை" என கூறி உள்ளார்.

72 ஆண்டுகளுக்கு முன் அடையாளம் அறியப்படாமல் புதைக்கப்பட்ட ராணுவ வீரர் உடல், இத்தனை வருட காத்திருப்புக்கு பிறகு அவரது குடும்பத்தினரை சென்று சேர்ந்துள்ள விஷயம், இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Also Read | "எப்போவும் போல வேலைக்கு போன பொண்ணு, அன்னைக்கி திரும்பி வரவே இல்ல".. கால்வாயில் கிடந்த உடல்.. நாட்டையே உலுக்கிய பயங்கரம்!!

SOLDIER, MISSING, KOREAN WAR

மற்ற செய்திகள்