“இதையே நான் மனைவி நகைகளை வித்து தான்..”.. வணிக உலகை அதிரவைத்த அனில் அம்பானியின் பேச்சு! அதிரடி செயலில் களமிறங்கிய சீன வங்கிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

69 லட்சம் கோடி ரூபாய் கடனை மறுசீரமைக்க சீனாவைச் சேர்ந்த மூன்று வங்கிகளிடம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் வாங்கியிருந்த 51 லட்சம் கோடி ரூபாய் கடனை செலுத்துவதாக அனில் அம்பானி தனிப்பட்ட உத்தரவாதம் அளித்திருந்தார்.

“இதையே நான் மனைவி நகைகளை வித்து தான்..”.. வணிக உலகை அதிரவைத்த அனில் அம்பானியின் பேச்சு! அதிரடி செயலில் களமிறங்கிய சீன வங்கிகள்!

ஆனால் இந்த கடனை திரும்பத் தராததால், அந்த சீன வங்கிகள் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டன் நீதிமன்றத்தில் அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கக் கோரி வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் பதில் அளித்த அனில் அம்பானி, தனக்கு தனிப்பட்ட சொத்துக்கள் எதுவும் இல்லை என்று கூற, இதை ஏற்காத வங்கிகள் அனில் அம்பானிக்கு சொகுசு கார்கள், தனி விமானம், மனைவி டினா அம்பானிக்கு பரிசளித்த ஹெலிகாப்டர் மும்பையில் இரண்டடுக்கு சொகுசு பங்களா என எல்லாம் இருப்பதாக கூறினார்.

sold wife jewels for legal fees anil ambani chinese bank action

இதற்கும் பதில் அளித்த அனில், அந்த சொத்துக்கள் எல்லாமே ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமானவை என்று, தன்னிடம் ஒரு சொத்தும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் லண்டன் நீதிமன்றம், உலக அளவில் அனில் அம்பானிக்கு சொந்தமாக இருக்கும் 75 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட சொத்து விபரங்களை தருமாறு உத்தரவிட்டது. இவ்வழக்கு தொடர்பாக 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வாக்குமூலம் அளித்த அனில் அம்பானி, “என்னிடம் எந்த தனிப்பட்ட சொத்தும் இல்லை. ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் நான் ஆடம்பர வாழ்க்கையை சுகிப்பதாக செய்திகள் வெளியிடுகின்றன. ஆனால் அதில் உண்மையில்லை. நான் மிகவும் எளிமையான வாழ்க்கையையே வாழ்கிறேன்” என்று கூறியதாக ரிலையன்ஸ் கம்யூ. செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

sold wife jewels for legal fees anil ambani chinese bank action

அத்துடன் கடன் பட்டு அனைத்து சொத்துகளையும் இழந்ததாக கூறிய அனில் அம்பானி, தற்போது இந்த வழக்கு தொடர்பான சட்ட செலவுகளுக்கு கூட தன் மனைவியின் நகைகளை விற்றுத்தான், செலவு செய்வதாகவும், தனது செலவுகள் அனைத்தையும் தனது குடும்பத்தினரே பார்த்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அனில் அம்பானி அளித்த தகவல்களின் அடிப்படையில் சட்டபூர்வமாக தங்களுக்கு சேர வேண்டிய கடன் தொகையை பெற சீன வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என லண்டன் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் உலகம் முழுவதும் உள்ள அனில் அம்பானியின் சொத்துக்களை ஏலம் விட தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

மற்ற செய்திகள்