'கணவன், மனைவி தனிமையில் இருக்கீங்களா'?...'பெட்ரூம்'ல 'ஸ்மார்ட் டிவி' வேண்டாம்'...பகீர் ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > உலகம்தொழில் நுட்பம் வளர வளர அதற்கு ஏற்றார் போல பல்வேரு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. வீடுகளில் சாதாரண டிவி இருந்த நிலையில், அது பல்வேறு அவதாரம் எடுத்து, எல்.சி.டி, எல்.இ.டி தொடங்கி சகல ஆன்லைன் வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் டிவியாக தற்போது வந்து நிற்கிறது. அதில் எந்த அளவிற்கு வசதிகள் இருக்கிறதோ, அந்த அளவிற்கு நாம் சற்று அசந்தாலும் நமது அந்தரங்கள் முதல், பல தகவல்களை தாரை வார்க்க வேண்டிய சூழ்நிலை வரும் என, பகீர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனை நாள்களான பிளாக் ஃப்ரைடே(Black Friday) மற்றும் சைபர் மன்டேவில்(Cyber Monday) இந்த வருடமும் விற்பனைகள் களைகட்டி முடிந்துள்ள நிலையில், தற்போது FBI அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் எச்சரிக்கை அறிக்கை பலரையும் அதிர செய்துள்ளது. தற்போது வரும் ஸ்மார்ட் டிவிகளில், இன்டர்நெட் வசதி தொடங்கி, ஃபேசியல் ரெகெக்னிஷன் வரை பல்வேறு திறன்களை கொண்டுள்ளன. இதனால் ஹேக்கர்கள் எளிதில் உங்கள் ஸ்மார்ட் டிவியை ஹேக் செய்ய முடியும் என விற்பனை நாளுக்கு முன்பாகவே, FBI ஒரு எச்சரிக்கை மணியை அடித்திருந்தது.
இதுபோன்ற ஸ்மார்ட் டிவியை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் ஆப்பின் வடிவமைப்பாளர்கள் டிவி வழியாக நம்மை கண்காணிக்க வாய்ப்புள்ளது. அதே போன்று ஹேக்கர்களுக்கும் இந்த வாய்ப்பு என்பது அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. தற்போது விற்பனையாகும் ஸ்மார்ட் டிவிகளில் இணையதள இணைப்புக்காக இயக்கப்படும் அதிநவீன மென்பொருள்கள் மற்றும் அதில் உள்ள மைக் ஹேக்கர்கள் நம்மை உளவு பார்க்க மிகவும் எளிமையான ஒன்றாக உள்ளது.
இதனிடையே வீட்டில் இருக்கும் குழந்தைகளிடம் வயது மீறிய வீடியோக்களைக் காட்டுவது எனத் தொடங்கும் ஹேக்கிங் செயல்கள், நம் வீட்டுப் படுக்கையறையில் உள்ள தொலைக்காட்சியின் கேமராக்கள் மற்றும் மைக் போன்றவற்றை இயக்கும் வரை செல்ல கூடும். பெட்ரூமில் ஸ்மார்ட் டிவி இருப்பது என்பது ஹேக்கர்களுக்கு நிச்சயம் ஆல்வா சாப்பிடுவது போல தான். அதற்கு சமீபத்தில் சூரத்தில் நடத்த சம்பவமே பெரிய உதாரணம்.
கணவனும், மனைவியும் படுக்கையறையில் தனிமையில் இருந்தபோது அங்கிருந்த ஸ்மார்ட் டிவி ஓடாமல் அணைத்து தான் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் இன்டர்நெட் இணைப்பு இருந்ததால், ஸ்மார்ட் டிவியில் இருந்த கேமரா மூலம் ஊடுருவிய ஹேக்கர்கள், கணவன், மனைவி தனிமையில் இருந்ததை ரெகார்ட் செய்து அதை ஆபாச தளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதுபோன்று ஹேக்கர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் பயன்பாட்டாளர்கள் அதிலிருந்து தப்பித்து கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய சிம்பிள் வழிகளை விளக்குகிறது தற்போதைய FBI-யின் அறிக்கை.
புதிதாக நாம் ஒரு ஸ்மார்ட் டிவி வாங்கும் முன்பு அதுகுறித்த அடிப்படை தகவல்களை தெரிந்து வைத்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். புதிதாக வாங்கிய டிவிக்களில் உள்ள நெட்வொர்க் கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றுவது மற்றும் அக்கருவியில் உள்ள கேமரா, மைக்குகளை ஆன், ஆஃப் செய்வது போன்றவை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான எளிய வழி முறைகள் ஆகும். மேலும் டிவியை ஆன், ஆஃப் செய்ய முடியாவிட்டால் கேமரா மீது ஒரு கறுப்பு துணியையோ அல்லது டேப்பை ஒட்டிவிடுவது நல்லது.
பயன்பாட்டாளர்கள் தங்கள் தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்யும் அப்டேட்களை உடனுக்குடன் செய்துவிடுவது நல்லது. டிவியை பார்க்காத நேரத்தில் இன்டர்நெட் இணைப்பில் இருந்து துண்டித்து வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் படுக்கையறையில் நிச்சயம் ஸ்மார்ட் டிவி வைக்காமல் இருப்பதே, பாதுகாப்பிற்கான முதல் வழி. ஏனென்றால் நீங்க டிவி பார்க்கலைனாலும் டிவி உங்கள பாத்துகிட்டே தான் இருக்கும்.