'5000 வருஷத்துக்கு முன்னாடியே இளைஞருக்கு இது நடந்திருக்கு'... 'அரண்டுபோன ஆராய்ச்சியாளர்கள்'... வைரலாகும் புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்த பூமியில் புதைந்திருக்கும் பல ரகசியங்கள் தினம் தினம் மனிதனுக்கு ஆச்சரியத்தை அளித்துக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ஆய்வாளர்களையே மிரள வைத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

'5000 வருஷத்துக்கு முன்னாடியே இளைஞருக்கு இது நடந்திருக்கு'... 'அரண்டுபோன ஆராய்ச்சியாளர்கள்'... வைரலாகும் புகைப்படம்!

ரஷ்யாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வெண்கல காலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மண்டை ஓட்டினை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அதில் அந்த இளைஞரின் மண்டை ஓட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது தான் ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மண்டை ஓட்டில் இருக்கும் துளை ஒன்று இதை உறுதி செய்கிறது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இல்லை என்பதைக் கூறியுள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், அந்த இளைஞர் சிறிது காலம் மட்டுமே வாழ்ந்துள்ளதாகக் கூறியுள்ளார்கள்.

இறந்த அந்த இளைஞர் பக்கவாட்டில் திருப்பி, கால்களை மடக்கியிருந்த நிலையில் அந்த இளைஞர் புதைக்கப்பட்டுள்ளார். பண்டைய கால மருத்துவர் கல் கருவிகள் மூலம் அறுவை சிகிச்சை செய்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். அந்த காலத்தில் இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் கடுமையான தலைவலியை எளிதாக்குவது, மண்டை ஓட்டின் காயங்களைச் சரி செய்வது அல்லது வேறு எதாவது சடங்குகளுக்காகவும் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.

Skull found of 5,000-year-old man who had ancient brain surgery

இதனிடையே இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கஞ்சா, மேஜிக் காளான்கள் உள்ளிட்டவை வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்