'மூழ்கிய' குட்டி..காப்பாற்ற சென்ற யானைகள்..அடுத்தடுத்து 'நேர்ந்த' பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நீர்வீழ்ச்சியில் சிக்கிய குட்டி யானையை காப்பாற்ற சென்ற யானைகளுக்கு, நேர்ந்த பரிதாபம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

'மூழ்கிய' குட்டி..காப்பாற்ற சென்ற யானைகள்..அடுத்தடுத்து 'நேர்ந்த' பரிதாபம்!

தாய்லாந்து நாட்டில் கவோ யாய் என்ற தேசிய பூங்கா உள்ளது.இந்த பூங்காவில் நீர்வீழ்ச்சியும் உள்ளதால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சி,விலங்குகள் இரண்டையும் கண்டு களித்து செல்வர்.இந்த நிலையில் இன்று காலை 3 மணிக்கு யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு பூங்கா ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

அங்கு குட்டி யானை ஒன்று நீர்வீழ்ச்சியில் மூழ்கிக் கிடப்பதும் அதைக் காப்பாற்ற சென்ற 2 யானைகள் களைத்து நிற்பதும் தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து அந்த இரண்டு யானைகளையும் காப்பாற்றிய ஊழியர்கள் அதிர்ந்து போயினர்.ஏனெனில் குட்டி யானையை காப்பாற்ற சென்ற 5 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்து கிடந்துள்ளன. குட்டியுடன் சேர்ந்து மொத்தம் 6 யானைகள் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் பூங்கா ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ELEPHANT