தண்டனைக்கு முன்பு அம்மாவை பார்க்க ஆசைப்பட்ட தர்மலிங்கம்.. சிங்கப்பூர் நீதிமன்றம் நிறைவேற்றிய உச்சபட்ச தண்டனை.. யார் இந்த நாகேந்திரன் தர்மலிங்கம்?
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மலேசிய நாட்டை சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் என்பவரை இன்று தூக்கிலிட்டது சிங்கப்பூர் நீதிமன்றம்.
கைது
மலேசியாவில் வசித்து வந்த இந்தியரான நாகேந்திரன் தர்மலிங்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போதைப் பொருள் கடத்த முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்த விசாரணை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாகேந்திரனை குற்றவாளி என சிங்கப்பூர் நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவருக்கு மரண தண்டனையும் விதித்தது.
தண்டனை
போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நாகேந்திரன் தர்மலிங்கம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால் தண்டனையை எதிர்த்து தர்மலிங்கத்தின் தாயார் மேல்முறையீடு செய்ததன் காரணமாக தண்டனை தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
தள்ளுபடி
நாகேந்திரனின் தண்டனையை எதிர்த்து அவரது தாயார் செய்த மேல்முறையீடு மனுவை கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இதனை அடுத்து ஏப்ரல் 27-ஆம் தேதி தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் கடைசியாக தனது குடும்பத்தாரை சந்திக்க நாகேந்திரனுக்கு 2 மணி நேரம் அவகாசம் அளித்தது நீதிமன்றம். கண்ணாடித் தடுப்புக்கு மத்தியில் உள்ள இடைவெளியில் ஒருவருக்கொருவர் கரங்களை மட்டும் பற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் நாகேந்திரனின் தாயார் தன் மகனின் கைகளை பற்றிக்கொண்டு கண்ணீர் விட்டதாக தெரிகிறது.
கடைசி சந்திப்பு
நாகேந்திரன் தனது தாயாரை கண்டதும் 'அம்மா.. அம்மா' என்று தொடர்ந்து கதறியதாகவும் அவருக்காக குரல் கொடுத்து வந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்திருக்கிறது. நாகேந்திரனுக்கு அறிவுசார் குறைபாடு இருப்பதாகவும் அதனால் அவரை தூக்கிலிடக் கூடாது எனவும் முன்னதாக நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அது குறித்த போதிய ஆவணங்கள் சமர்பிக்கப்படாததால் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று நாகேந்திரன் தர்மலிங்கத்தின் தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது சிங்கப்பூர் நீதிமன்றம். இது குறித்து பேசிய நாகேந்திரன் சகோதரர் நவீன் குமார் "நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரது உடல் வடக்கு தீபகற்ப மலேசியாவில் உள்ள ஈப்போ நகருக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.
நாகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் சிங்கப்பூர் அரசு இன்று தண்டனையை நிறைவேற்றி இருப்பது உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்