IKK Others
MKS Others

'அந்த' நாட்டுல இருந்து தான் வர்றீங்களா...? 'அப்போ உங்களுக்கு குவாரண்டைன் வேண்டாம்...' - ஆபத்தான நாடுகளில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தென் ஆப்பிரிக்காவில் உருவான ஓமிக்ரான் வைரஸை பரிசோதித்த நிபுணர்கள், ‘இது கோவிட் 19 போல, அதிக அபாயம் கொண்டது அல்ல. மிகுந்த குறைந்த செயல்திறனையே இந்த வைரஸ் பெற்றுள்ளது’ என்கிறார்கள். ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகள் மிகவும் லேசானவையாக இருக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

'அந்த' நாட்டுல இருந்து தான் வர்றீங்களா...? 'அப்போ உங்களுக்கு குவாரண்டைன் வேண்டாம்...' - ஆபத்தான நாடுகளில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாடு...!

உதாரணமாக ஓமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனைக்கு செல்ல தேவை இல்லை. வீட்டில் இருந்தே சிகிச்சை மேற்கொள்ளலாம். அந்த அளவுக்கு வீரியம் குறைந்து காணப்படுகிறது.

இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க இந்திய அரசு மீண்டும் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது வரை ஓமிக்ரான் வைரஸ் பரவியுள்ள நாடுகளை ரிஸ்க் நாடுகள் என்ற பட்டியலின் கீழ் கொண்டுவந்துள்ளது.

தற்போது வரை வெளிவந்த பரிசோதனைகளின் படி ஓமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை எனவும், ஆனால் டெல்டா வைரஸை விட அதிகளவில் பரவும் தன்மை கொண்டது எனவும் மருத்துவ நிபுணர்களால் கூறபடுக்கிறது.

இருப்பினும் ஓமிக்ரான் மேலும் உருமாறினால் என்னென்ன விளைவுகள் வரும் என தெரியாத சூழலில் அனைத்து உலக நாடுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவும் என்ற ஆபத்தான நாடுகள் பட்டியலை வெளியிட்டு, அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதோடு, வெளிநாட்டு பயணிகள் இந்தியா வந்ததும் விமான நிலையங்களிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது, ஆபத்தான நாடுகளில் பட்டியலில் இருந்து சிங்கப்பூரை மத்திய அரசு நீக்கி உள்ளது. அதன்படி இனி, சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் கூடுதல் கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளைப் பின்பற்ற தேவையில்லை.

மீதம் இருக்கும் ரிஸ்க் நாடுகளான பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, கானா, மொரிஷியஸ், நியூசிலாந்து, தான்சானியா, ஜிம்பாப்வே, ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தகுந்த பரிசோதனைக்கு பின்னரே இந்தியாவிற்குள் நுழைய வேண்டும் என மத்திய அரசின் அறிக்கை வெளியாகியுள்ளது.   இதனிடையே சர்வதேச விமான சேவை கட்டுப்பாடு ஜனவரி 31, 2022 வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கால சூழல் காரணமாக விமான கட்டுப்பாட்டு அலுவலகம்அனுமதித்துள்ள குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே விமான சேவை நடைபெறும்.

SINGAPORE, OMICRON, ஓமிக்ரான், சிங்கப்பூர்

மற்ற செய்திகள்