COVID19VACCINE: ‘லண்டனில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி பரிசோதனைகள்!’.. ஆனால் இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் 'நிலை' இதுதான்!!
முகப்பு > செய்திகள் > உலகம்அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கூட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனைகள், தன்னார்வலர் ஒருவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, செப்டம்பர் 6 ஆம் தேதி பரிசோதனையை நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளிலும் மருத்துவ பரிசோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்தியாவை பொருத்தவரை "இந்தியாவில் சோதனைகளை மறுதொடக்கம் செய்ய டி.சி.ஜி.ஐ எங்களுக்கு அனுமதி அளித்தவுடன், நாங்கள் சோதனைகளை மீண்டும் தொடங்குவோம்" என்று இந்திய சீரம் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமையன்று வெளியான தகவல்களின்படி, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி, AZD1222, மருத்துவ பரிசோதனைகள் இங்கிலாந்தில் மீண்டும் தொடங்கியுள்ளதை மருந்துகள் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் (MHRA) உறுதிப்படுத்தியது.
ஆனால் இந்தியாவில் சீரம் நிறுவனத்தில் கொரோனா பரிசோதனைகளுக்கான பாதுகாப்பு கண்காணிப்பை அதிகரிக்கவும், அதன் விரிவான திட்டத்தையும் அறிக்கையையும் சமர்ப்பிக்கவும் டி.சி.ஜி.ஐ, அறிவுறுத்தியது. அத்துடன் “இந்த சோதனைகள் முடியும் வரை எந்த முடிவுகளையும் எடுக்கக்கூடாது” என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் உரிமையாளருமான ஆதார் பூனவல்லா தெரிவித்தார்.
இதுகுறித்து தமது ட்வீட்டில், “நான் முன்பே குறிப்பிட்டது போல, சோதனைகள் முழுமையாக முடிவடையும் வரை நாம் எந்த முடிவுகளுக்கும் செல்லக்கூடாது”என்று தெரிவித்திருந்தார்.
மற்ற செய்திகள்