'ஸ்டாப் கம்யூனிஸ்ட் சீனா' கையெழுத்து இயக்கம்... 'சில மணி' நேரத்தில் 'கையெழுத்திட்டவர்களின்...' 'மலைக்க வைக்கும் எண்ணிக்கை...' 'அடுத்து அமெரிக்க ஆதரிக்க போகும் நாடு...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா விவகாரத்தில் சீனாவை பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று கூறி, அமெரிக்க வாழ் இந்திய பெண் தலைவர் நிக்கி ஹாலி கையெழுத்து இயக்கம் தொடங்கி உள்ளார்.

'ஸ்டாப் கம்யூனிஸ்ட் சீனா' கையெழுத்து இயக்கம்... 'சில மணி' நேரத்தில் 'கையெழுத்திட்டவர்களின்...' 'மலைக்க வைக்கும் எண்ணிக்கை...' 'அடுத்து அமெரிக்க ஆதரிக்க போகும் நாடு...'

கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய தொற்று என்பதை சீனா தொடக்கத்தில் மறைத்து விட்டதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இது தொடர்பாக எச்சரித்தவர்களையும் சீன கம்யூனிஸ்டு அரசு கைது செய்து, உண்மை தகவல்களை வெளியிடாமல் மறைத்துவிட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னராகவும், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராகவும் இருக்கும் இந்திய வம்சாவளி பெண் தலைவர் நிக்கி ஹாலி, இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கி உள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்துக்கான கோரிக்கை மனுவாக இந்த கையெழுத்து இயக்கம் அமைந்துள்ளது. அவர் 1 லட்சம் பேரின் கையெழுத்துக்களை பெற முடிவு செய்துள்ளார்.

இந்த இயக்கத்தை தொடங்கிய சில மணி நேரத்தில் 40 ஆயிரம் பேர் அதில் கையெழுத்து போட்டுள்ளனர். ‘ஸ்டாப் கம்யூனிஸ்டு சீனா’  என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த கையெழுத்து இயக்கம் சீனாவை கொரோனா  விவகாரத்தில் பொறுப்பெற்றுக் கொள்ள செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக ஹாலி தெரிவித்தார்.

மேலும் கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கியதை சீனா மூடி மறைத்ததா? என்பதை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரிக்கவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், முக்கிய மருத்துவ சாதனங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றுக்கு சீனாவை சார்ந்து நிற்பதை அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், சீனாவுக்கு எதிராக தைவானை ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.