cadaver Mobile Logo Top
Viruman Mobiile Logo top

சிறுவர்கள் எடுத்த 'செல்ஃபி'.. "கொஞ்ச நேரம் கழிச்சு பாக்குறப்போ, அதுல இன்னொரு ஆள் இருந்ததும் தெரிஞ்சுருக்கு".. அதிர்ச்சி சம்பவம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அவ்வப்போது நாம் இணையத்தில் நினைத்து கூட பார்க்க முடியாத அளவில் வினோதமான அல்லது அமானுஷ்யமான நிகழ்வுகள் ஏதாவது அரங்கேறி, இது தொடர்பான புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் பார்ப்போர் பலரையும் அதிர்ச்சியில் உறைந்து போக வைக்கும்.

சிறுவர்கள் எடுத்த 'செல்ஃபி'.. "கொஞ்ச நேரம் கழிச்சு பாக்குறப்போ, அதுல இன்னொரு ஆள் இருந்ததும் தெரிஞ்சுருக்கு".. அதிர்ச்சி சம்பவம்

Also Read | ஒரு நொடில வானிலை மாறிடுமாம்.. மக்களை திகைக்க வைக்கும் வானவில் மலை.. பின்னாடி இருக்கும் சுவாரஸ்ய உண்மை.. !

அப்படி இரண்டு சிறுவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் தொடர்பான செய்தி, பலரையும் பதற்றம் அடைய வைத்துள்ளது.

கேப்ரியல் ஆஷ்மோர் என்ற சிறுவன் ஒருவன், தனது சகோதரரான கிறிஸ்டியன் ஆஷ்மோருடன் இணைந்து, செல்ஃபி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அப்போது, கிறிஸ்டியன் அங்கே சில டயர்களுக்குள் அமர்ந்திருக்க, கேப்ரியல் வெளியே நின்றபடி எடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தாங்கள் எடுத்த செல்ஃபியை போனில் பார்த்த போது, இருவருமே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதற்கு காரணம், டயர்களுக்கு நடுவே கிறிஸ்டியன் மட்டும் இல்லை என்பது தான். அவருக்கு பின்னால், ஒரு சிறுமியின் முகமும் அதற்குள் தெரிந்ததைக் கண்டு, அவர்கள் பீதியில் உறைந்து போனார்கள்.

தொடர்ந்து, இந்த புகைப்படத்தினை அவர்களின் தாயான ஆயிஷா வில்சனிடம் அவர்கள் காட்டி உள்ளனர். ஆரம்பத்தில், தனது மகன்கள் பின்னால் ஒரு இளம் பெண்ணின் உருவத்தை எடிட் செய்திருப்பார்கள் என ஆயிஷா கருதி உள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் அதனை மறுத்துள்ளனர். அதே போல ஒரு இளம்பெண்ணின் முகத்தினை ஆயிஷாவும் எடிட் செய்து பார்த்துள்ளார். ஆனால், அதில் குறிப்பிட்ட இடத்தில் இருந்தது போல, அவரால் எடிட் செய்ய முடியவில்லை. இதனால், தனது மகன்கள் அப்படி எதுவும் செய்யவில்லை என்றும், நிஜமாகவே பின்னால் ஒரு உருவம் தெரிந்திருக்கலாம் என்பதையும் தாயாரான ஆயிஷா உணர்ந்துள்ளார்.

இது பற்றி பேசும் அவர், "எனக்கு பேய்கள் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால், இதனைக் கண்டு நான் சந்தேகம் அடைந்தேன். அவர்களிடம் கேட்ட போதும் இதனை அவர்கள் மறுத்தார்கள். நான் முயற்சி செய்து பார்த்த போதும் என்னால் முடியவில்லை. அதே பல, போட்டோ எடுத்த குறுகிய நேரத்தில் என்னிடம் அவர்கள் இதனை காட்டி விட்டார்கள். அதற்குள் அவர்களால் எடிட் செய்திருக்கவும் முடியாது. அது உண்மையானது தான்" என்றும் ஆயிஷா தெரிவித்துள்ளார்.

siblings take selfie in playground photo surfaces online

மேலும், மகன்கள் எடுத்த செல்ஃபியையும் ஆயிஷா சமூக வலைதளத்தில் பதிவிட, ஒரு பக்கம் பலரும் இதனை நம்பினாலும், மறுபக்கம் இது போலியானது என்றும், அனுபவம் இல்லாத ஒருவர் எடிட் செய்திருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

இது பற்றி பேசும் ஆயிஷா, "பலரும் இதனை உண்மை என்று நினைக்கிறார்கள். ஆனால், மற்ற சிலர், இது போலியானது என குறிப்பிடுகின்றனர். ஆனால், இந்த புகைப்படம் உண்மையானது. பேய்கள் மீதான எனது அதீத நம்பிக்கையை அதிகரித்துள்ளது" என ஆயிஷா தெரிவித்துள்ளார்.

இரண்டு சிறுவர்களுக்கு பின்னால், இளம் பெண்ணின் முகம் தெரியும் புகைப்படம், தற்போது இணையத்தில் வெளியாகி அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | 38 வருசத்துக்கு முன்னாடி காணாம போன ராணுவ வீரர்.. "அங்க இருந்த பதுங்கு குழி'ல பாத்தப்போ.." இத்தனை வருஷம் கழிச்சு தெரஞ்ச 'விஷயம்'

SELFIE, SIBLINGS, SIBLINGS TAKE SELFIE, ONLINE

மற்ற செய்திகள்