COBRA M Logo Top

"77 வருஷம் ஆச்சு என் தம்பி'ய பாத்து".. ஒரு வயதில் பிரிந்த சகோதரன்.. இத்தனை வருஷம் கழிச்சு நடக்க போகும் அற்புதம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இரண்டாம் உலக போர் முடிவடையும் தருவாயில் இருந்த போது, பிரிந்த இரண்டு சகோதரர்கள், சுமார் 77 ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்துள்ள விஷயம், பலரையும் நெகிழ வைத்துள்ளது.

"77 வருஷம் ஆச்சு என் தம்பி'ய பாத்து".. ஒரு வயதில் பிரிந்த சகோதரன்.. இத்தனை வருஷம் கழிச்சு நடக்க போகும் அற்புதம்!!

Also Read | "வயல்'ல தோண்டுறப்போ கெடச்ச சாமி சிலை'ங்க இது".. பயபக்தியுடன் தொழுது காணிக்கை போட்ட மக்கள்.. "உண்மை தெரிஞ்சதும் ஊரே நடுங்கி போச்சு"

Ted Nobbs என்ற நபருக்கு தற்போது 83 வயதாகிறது. இவரது இளைய சகோதரரான Geoff என்பவருக்கு 79 வயது ஆகிறது.

முன்னதாக, தனது மற்ற உடன் பிறந்த சகோதரர்களான Barry மற்றும் John ஆகியோருடன் இருந்த Ted, 30 வயதிலேயே அவர்களின் தாய் புற்றுநோய் மூலம் கடந்த 1945 ஆம் ஆண்டு உயிரிழந்த காரணத்தினால் சகோதரரான ஜியோஃப்-ஐ பிரியும் சூழ்நிலை உருவானது. தாய் இறந்த போது, கடைசி பிள்ளையான ஜியோஃப்பிற்கு ஒரு வயது மட்டுமே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

siblings separate as kids to reunite after 77 years

Image Credits : Ted Nobbs / SWNS

இதனால், அவரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்ட டெட்டின் தந்தை, மகனுக்கு சிறந்த வாழ்க்கை கிடைக்க வேண்டும் என கருதி, ஜியோஃபை தத்து கொடுக்கவும் முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இரண்டாம் உலக போர் முடியும் தருவாயில் இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், தன்னை தத்தெடுத்த குடும்பத்துடன் கடந்த 1951 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கும் ஜியோஃப் குடிபெயர்ந்துள்ளார்.

siblings separate as kids to reunite after 77 years

Image Credits : Ted Nobbs / SWNS

தற்போது வரை அங்கே வாழ்ந்து வரும் ஜியோஃப்பிற்கு 8 பிள்ளைகளும், பேரக் குழந்தைகளும் உள்ளனர். இத்தனை ஆண்டுகளாக, தங்களின் கடைசி சகோதரனான ஜியோஃபை கண்டுபிடிக்க டெட், பேரி மற்றும் ஜான் ஆகிய மூவரும் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டனர். அப்படி இருக்கையில், கடந்த 2014 ஆம் ஆண்டு அதிர்ஷ்டம் ஒன்று கிடைத்துள்ளது. மூத்த சகோதரரான ஜான் இறந்து நான்கு ஆண்டுகளான பிறகு, சகோதரர் பேரியை கண்டுபிடித்து அவருக்கு ஒரு கடிதத்தையும் ஜியோஃப் அனுப்பி உள்ளார்.

siblings separate as kids to reunite after 77 years

Image Credits : Ted Nobbs / SWNS

இதனைத் தொடர்ந்து, Skype மற்றும் போன் மூலம் பல ஆண்டுகள் கழித்து ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டனர். சுமார் 10,000 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சகோதரர்களான டெட் மற்றும் ஜியோஃப் ஆகியோர், 77 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக சந்திக்க உள்ளனர். இத்தனை ஆண்டுகள் கழித்து சகோதரர்கள் ஒருவருக்கு ஒருவர் நேரில் பார்க்க உள்ளதால், உற்சாகத்திலும் உள்ளனர்.

முன்னதாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சகோதரர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ள திட்டம் போட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று பேரிடர் காரணமாக தள்ளிப் போயுள்ளது. அப்படி இருக்கையில், அடுத்த சில தினங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் குழந்தை பருவத்தை தாண்டிய பிறகு சந்தித்துக் கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | 55 வயசுல 5-ஆவது கல்யாணம்.. அப்பா போட்ட பிளான்.. ஸ்பாட்டுக்கே போன பிள்ளைங்க.. அடுத்து நடந்த சம்பவம்.?

SIBLINGS, KIDS, REUNITE

மற்ற செய்திகள்