"க்ரிட்டிக்கல் கண்டிஷன்"..ஷின்சோ அபே-வின் உடல்நிலை குறித்து ஜப்பான் அரசு வெளியிட்ட தகவல்.. உலக அளவில் ஏற்பட்ட பரபரப்பு.. முழு விபரம்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபேவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துவருவதாகவும் அந்நாட்டு பிரதமர் கிஷிடா அறிவித்திருக்கிறார்.

"க்ரிட்டிக்கல் கண்டிஷன்"..ஷின்சோ அபே-வின் உடல்நிலை குறித்து ஜப்பான் அரசு வெளியிட்ட தகவல்.. உலக அளவில் ஏற்பட்ட பரபரப்பு.. முழு விபரம்.!

Also Read | "ஏதோ உலகத்துக்கு என்னால முடிஞ்ச உதவி".. இரட்டை குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க் போட்ட வைரல் ட்வீட்....!

ஷின்சோ அபே

ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள நாகதோ நகரில் 1954 ஆம் ஆண்டு பிறந்தார் ஷின்சோ அபே. பாரம்பரிய அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர் 1977 ஆம் ஆண்டு டோக்கியோவில் உள்ள செய்கெய் பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பை முடித்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி முடித்தவுடன் 1979 ஆம் ஆண்டு நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தார் அபே.

1982ம் ஆண்டு பணியிலிருந்து விலகிய ஷின்சோ அபே, பின்னர் அரசியல் பணிகளில் ஈடுபட்டார். லிபெரல் டிமாக்ரட்டிக் கட்சியின் தவிர்க்க முடியாத தலைவராக உயர்ந்த அபே, 2006 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Shinzo Abe is in critical condiion says Japan PM Kishida

இளைய பிரதமர்

ஜப்பான் நாட்டின் மிக இளவயதில் பிரதமரானவர் என்ற பெருமையை 2006 ஆம் ஆண்டு வெற்றியின் மூலம் படைத்தார் அபே. ஆனால் அடுத்த ஆண்டே இவருடைய கட்சி மேலவையில் பெரும்பான்மையை இழந்தது. அதன் காரணமாக, பிரதமர் பதவியை இழந்த அபே மீண்டும் 2012 ஆம் ஆண்டு பிரதமர் ஆனார். பொருளாதார வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்த அபே, இந்திய - ஜப்பான் உறவு மேம்பட தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அபே அறிவித்தார். பதவிக்காலம் முடிவடைய ஓராண்டு இருந்த நிலையில் உடல்நிலை காரணமாக பதவியை துறப்பதாக அறிவித்தார் அபே. ஜப்பான் வரலாற்றில் அதிக காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையும் அபே-க்கு உண்டு.

சோகம்

இந்நிலையில், நாரா பகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அபே. அப்போது மர்ம நபர் ஒருவர் சுட்டதில் அபே அங்கேயே சுருண்டு விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபே-வுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில்,"முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நேரத்தில் மருத்துவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவருகிறார்கள். அவர் உயிர் பிழைத்து மீண்டு வருவார் என்று நான் நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Shinzo Abe is in critical condiion says Japan PM Kishida

ஜப்பான் முன்னாள் அதிபர் ஷின்சோ அபே மீது தாக்குதல் நடத்தப்பட்டது, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | 23 வருஷத்துக்கு அப்பறம் இப்படி நடந்திருக்கு.. அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

JAPAN, JAPAN PM, JAPAN PM KISHIDA, SHINZO ABE

மற்ற செய்திகள்