திருமணத் 'தகவலை' சொல்வதற்காகத்தான் என்னைத் தேடி வந்தாள்... 'சுக்குநூறாக' உடைந்த அவளின் 'கனவுகள்' ...! : தோழி கண்ணீர்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்கா மற்றும் இரான் நாடுகளுக்கு இடையே பிரச்சனைகள் நிலவி வரும் சூழலில், கடந்த புதன்கிழமை இரானின் தலைநகர் தெஹ்ரானிலுள்ள இமாம் கோமெய்னி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இதில், இரான், கனடா, உக்ரைன், ஸ்வீடன், ஆப்கான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 176 பயணிகள் இறந்தனர். `தொழில்நுட்பக் கோளாறு’ காரணமான இந்த விபத்து நடந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.

திருமணத் 'தகவலை' சொல்வதற்காகத்தான் என்னைத் தேடி வந்தாள்... 'சுக்குநூறாக' உடைந்த அவளின் 'கனவுகள்' ...! : தோழி கண்ணீர்...

தெஹ்ரானில் நடந்த இந்த விபத்தில் இறந்த பெரும்பான்மையானவர்கள் பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவர்கள். கனடாவிலுள்ள டொரான்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் இதில் அடங்குவர். இறந்த மாணவர்களின் நண்பர்கள், அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் நினைவேந்தலை நடத்தியுள்ளனர்.

அதில் பேசிய மாணவி ஒருவர்,``நான் எல்லோரிடமும் நெருக்கமாகப் பழகுவேன்.ஆனால், செயினாப் ஆசாதி லாரி (இறந்த தோழியின் பெயர்) எனக்கு சிறப்பானவள். அவள் வயது 21. அவளது திருமணம் குறித்த தகவலை எங்களிடம் பகிர்ந்துக்கொள்ள வந்துக்கொண்டிருந்தாள். அதுமட்டுமல்ல, அவள் கூடிய விரைவில் பட்டம் பெறப்போகிறாள். அவளுக்கு அதிகமான கனவுகள் இருந்தன. எல்லாக் கனவுகளும் இப்போது கலைந்துவிட்டன. நல்ல செய்தியை கொண்டு வருவதற்காக கிளம்பியவளின் முடிவுச்செய்தி நிலைகுலைய செய்துவிட்டது” என்று கண்ணீருடன் கூறினார்.

தெஹ்ரானில் உள்ள ஷெரிஃப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலில், ``எங்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 12 முன்னாள் மாணவர்கள் விபத்தில் இறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுடைய அடையாளங்கள் உறுதி செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளனர்.

லண்டனிலுள்ள இம்பெரிகல் கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,``இந்தத் துயரமான செய்தியைக்கேட்டு நாங்கள் வருந்துகிறோம். எங்கள் கல்லூரியைச் சேர்ந்த சயீத் தஹ்மசேபி கதேமாசாடி, ஒரு மிகச்சிறந்த பொறியியலாளர். கணினி பொறியியல் துறையில் அவர் செய்த பங்களிப்புகள் மிகவும் கவனிக்கத்தக்கது. சமூகத்திலுள்ள அனைவரிடமும் அன்பாகவும் பணிவாகவும் நட்புடனும் இருந்தார்” என்று கூறியுள்ளனர்.

விபத்தில் மரணமடைந்த மற்ற பயணிகளின் நண்பர்களும், குடும்பத்தினரும் தங்களது இரங்கல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். உலகின் முக்கிய பிரபலங்களும் இச்சம்பவத்தில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

FLIGHT, ACCIDENT, MOURNING, TEARS