புறப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பிடித்த 'ஹெலிகாப்டர்'... தரையை நோக்கி பாய்ந்ததால் 'அதிர்ச்சி'... 'கண்ணிமைக்கும்' நேரத்தில் நிகழ்ந்த கோர 'விபத்து'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஃபிலிப்பைன்சில் காவல்துறையினர் சென்ற ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹேலிகாப்டரில் பயணித்த 7 காவல்துறையினரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் லகுணா மாகாணம் சான் பெட்ரோ நகர் அருகே உள்ள போலீஸ் மைதானத்தில் இருந்து காவல்துறை அதிகாரிகள் சிலர் இன்று காலை ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.
காவல்துறை தலைவர் ஜெனரல் ஆர்ச்சி கம்போவா, 4 அதிகாரிகள் மற்றும் 2 பைலட்டுகள் என 7 பேர் அதில் பயணித்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்த ஹெலிகாப்டர், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அப்பகுதியில் உள்ள சாலையில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரும் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். ஒருவருக்கு மட்டும் தலையில் காயம் பட்டதால் அவர் மயக்கமடைந்தார். சம்பவம் நடைபெற்ற பகுதியிலிருந்து அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.