‘வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுசா முடியல’... ‘அதனால, வெயிட் பண்ணுங்க’... ‘ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்பார்’...!!! ‘புதுகுண்டை தூக்கிப் போட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்’...!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்பதற்கான வழிமுறைகள் சுமூகமாக நடைபெறும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுசா முடியல’... ‘அதனால, வெயிட் பண்ணுங்க’... ‘ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்பார்’...!!! ‘புதுகுண்டை தூக்கிப் போட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்’...!!!

கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளை அறிவிப்பதில் இழுபறி நீடித்துவந்த நிலையில், பின்னர் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டுச் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.

அமெரிக்காவில் ஒரு சில மாகாணங்களில் தேர்தல் பணி இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் வெற்றி, தோல்வி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இதனால் ஜோ பைடன் வெற்றி பெற்றதாகக் கூறப்படுவதை எதிர்த்து ட்ரம்ப் தரப்பினர், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாக கூறிவருவதுடன், அதற்கான சட்ட நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

Secretary of State Mike Pompeo makes big claim about Donald Trump

இந்தநிலையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, `அமெரிக்காவில் 2-வது முறையாக ட்ரம்ப் ஆட்சியே தொடரும். அதற்கான வழிமுறைகள் சுமுகமான முறையில் எடுக்கப்படும். தேர்தல் பணி முழுமையாக முடிவடையும் நேரத்தில், மொத்த வாக்குகளும் சேகரிக்கப்பட்ட பின்னர் அமெரிக்காவின் சட்டதிட்ட நெறிமுறைகளின்படி யார் அதிபர் என்பது மக்களுக்குத் தெரியவரும்.

தற்போது செயல்பட்டுவரும் வெற்றிகரமான அரசாங்கத்தை மேலும் நல்வழிக்குக் கொண்டு செல்ல அவரால் மட்டுமே முடியும். மேலும், இந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் ஒவ்வோர் அசைவையும் உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கண்காணித்துவருகின்றன. அதனால், முறையாக வாக்களிக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் சரியான முறையில் கையாளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலில் நிகழ்த்தப்படும் எந்தவோர் அத்துமீறலையும் ஏற்றக்கொள்ள முடியாது’ என்று தெரிவித்தார்.

Secretary of State Mike Pompeo makes big claim about Donald Trump

இது உலக அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ட்ரம்ப் தரப்பினரால் தொடர்ந்து கூறப்பட்டுவரும் இது போன்ற எதிர் கருத்துகளுக்கு பதிலளிக்கும்விதமாக நேற்று வெலிங்டன் மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், `ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து தொடர்ந்து பிடிவாதம் பிடித்துவருவது தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துவதோடு, இது அதிபர் பதவியின் பாரம்பர்யத்தைக் கெடுப்பதாகவும் இருக்கிறது.

ட்ரம்ப், மைக் பாம்பியோவால் கூறப்பட்டுவரும் கருதுகளுக்கு இதுவரை எந்தவோர் ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை. விரைவில் அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்வாா்கள்’ என்று கூறினார்.

மற்ற செய்திகள்