செவ்வாய் கிரகத்துல ரகசிய பாதை..?.. முதன்முறையாக மவுனத்தை கலைத்த நாசா ஆராய்ச்சியாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

செவ்வாய் கிரகத்தில் ரகசிய பாதை போன்ற அமைப்பு இருக்கும் புகைப்படத்தை கியூரியாசிட்டி ரோவர் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது. இது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய நிலையில் தற்போது நாசா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

செவ்வாய் கிரகத்துல ரகசிய பாதை..?.. முதன்முறையாக மவுனத்தை கலைத்த நாசா ஆராய்ச்சியாளர்கள்..!

Also Read | முன்னாடி எலான் மஸ்க்.. இப்போ மார்க் சக்கர்பர்க்.. அடுத்தடுத்து வச்ச டார்கெட்..19 வயசு ஹேக்கரால் வந்த புதிய சிக்கல்..!

கியூரியாசிட்டி ரோவர்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி கியூரியாசிட்டி ரோவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் தட்பவெட்ப நிலை, நில அமைப்பு, அங்கே உயிர்கள் வாழ சாதகமான சூழ்நிலை இருக்கிறதா? என்பதை கண்டறிவதே இந்த ரோவரின் நோக்கமாகும். இந்த விண்கலம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது. அன்று துவங்கி பல்வேறு மாதிரிகளை சேகரிப்பதுடன், புகைப்படங்களை அனுப்பிவரும் இந்த ரோவர் கடந்த 7 ஆம் தேதி அனுப்பிய புகைப்படம் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

Secret Door in Mars NASA Comments on it for the first time

ரகசிய பாதை?

நாசா அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் தற்போது செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஷார்ப் மலையில் ஆய்வு செய்துவருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் மலையில் ஒரு ரகசிய பாதை இருப்பது போன்ற வடிவம் தென்படுகிறது. இது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இது ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகளின் புகலிடமாக இருக்கலாம் எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டுவருகின்றனர்.

Secret Door in Mars NASA Comments on it for the first time

நாசா சொல்வது என்ன?

இப்படி செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் நாசா," இந்த புகைப்படம் பலருக்கும் பாதை போன்று தோன்றியிருக்கிறது. ஆனால், இது சாதாரண புவியியல் அமைப்பு மட்டுமே. சிலருக்கு துல்லியம் இல்லாத சீரற்ற புகைப்படங்களை பார்க்கும்போதும் ஒரு தெளிவான வடிவம் தோன்றும். இதனை pareidolia என்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளது.

Secret Door in Mars NASA Comments on it for the first time

மேலும், இந்த ரகசிய கதவு இருப்பதாக சொல்லப்படும் இடத்தை தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளது நாசா. அந்த மலை குன்றில் ஆங்காங்கே இப்படியான தோற்றம் இருப்பதையும் நாசா சுட்டிக்காட்டியுள்ளது.

Secret Door in Mars NASA Comments on it for the first time

செவ்வாய் கிரகத்தில் ரகசிய பாதை இருப்பதாக புகைப்படம் வெளிவந்த நிலையில், நாசா அதனை மறுத்திருப்பதுடன் அது சாதாரண புவியியல் அமைப்பு என்று தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

Nenjuku Needhi Home
SECRET DOOR IN MARS, NASA, நாசா ஆராய்ச்சியாளர்கள், ரகசிய பாதை

மற்ற செய்திகள்