'அவங்க ஹெல்த் ரொம்ப மோசமாயிற்று வருது...' காப்பாத்தணும்னா உடனே 'இத' பண்ணியாகணும்...! - முதல் மனைவியை காப்பாற்ற 2-ம் மனைவி செய்த 'நெகிழ' வைக்கும் காரியம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி ஜிம் மற்றும் மைலன் மெர்தே. முன்னாள் கணவன் மனைவியான இவர்கள் விவாகரத்து செய்து பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், குழந்தைகளின் நலன் கருதி இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

'அவங்க ஹெல்த் ரொம்ப மோசமாயிற்று வருது...' காப்பாத்தணும்னா உடனே 'இத' பண்ணியாகணும்...! - முதல் மனைவியை காப்பாற்ற 2-ம் மனைவி செய்த 'நெகிழ' வைக்கும் காரியம்...!

இந்நிலையில் ஜிம், கடந்த 10 வருடமாக டெப்பி என்ற பெண்ணுடன் பழகி வந்த நிலையில் கடந்த வருடம் நவம்பர் 22 ஆம் தேதி அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும், டெப்பி, ஜிம்மின் முதல் மனைவி மைலன் மெர்தே நண்பர்களாவே பழகி வந்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாகவே மைலன் சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரின் உடல்நிலை மோசமாகி தற்போது மருத்துவமனையிலும் அனுமதிக்கபட்டுள்ளார்.

மேலும் அவரின் சிறுநீரகங்களின் செயல்பாடும் 8 சதவீதமாக குறைந்து, சிறுநீரகத்தை மாற்றியே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு மைலன் தள்ளப்பட்டுள்ளார்.

மைலனின் சகோதரர் சிறுநீரகத்தை தர முன்வந்த போதும், அவரது சிறுநீரகம் மைலன் சிறுநீரகத்தோடு ஒத்துப்போகவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் எதிர்பாராத விதமாக டெப்பி தனது சிறுநீரகத்தை தர முன்வந்தார்.

அதோடு அதிர்ஷ்டவசமாக டெப்பி சிறுநீரகம் மைலனின் சிறுநீரகத்தோடு ஒத்தும் போகி, அறுவை சிகிச்சைக்கான நாளும் ஒதுக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் நல்லபடியாக நடந்தது.

இதுகுறித்து கூறிய டெப்பி, 'இதற்கு முன் ஒருமுறை எனது சகோதரர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த

போது அவருக்கு இரட்டை நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. அப்போது தனது நுரையீரலை தர முன்வந்தார் மைலன். ஆனால் அவரின் நுரையீரல் டெப்பியின் சகோதரரின் நுரையீரலுடன் பொருந்தவில்லை.

second wife who gave the kidney to her husband’s ex-wife

தற்போது மைலனுக்கு என்னுடைய சிறுநீரகம் பொருந்தியுள்ளது. இதை செய்வது என்னுடைய கடமை.  மேலும் தனது திருமண நாளும், எனக்கு அறுவை சிகிச்சை நடந்த நாளும் எனது வாழ்நாளின் மிகச்சிறந்த நாட்கள்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்