சாதிய பாகுபாடுக்கு முற்றுப்புள்ளி.. அமெரிக்காவிலேயே முதல் முறை.. வரலாற்றை மாற்றி எழுதிய இந்தியப் பெண்.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக சியாட்டில் நகரம் சாதிய பாகுபாட்டை தடை செய்வதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பான சட்டமும் நகர கவுன்சிலில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

சாதிய பாகுபாடுக்கு முற்றுப்புள்ளி.. அமெரிக்காவிலேயே முதல் முறை.. வரலாற்றை மாற்றி எழுதிய இந்தியப் பெண்.. முழுவிபரம்..!

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | "சென்னை சேப்பாக்கத்துல தோனியும் ஜடேஜாவும் கால் வச்சா போதும் விசில் பறக்கும்" ..சின்ன தல ரெய்னா உருக்கம்..!

அதிக அளவில் இந்தியர்கள் வசிக்கும் வெளிநாடுகளில் ஒன்று அமெரிக்கா. படிப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியர்கள் அமெரிக்காவிற்கு செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் அங்கேயே செட்டில் ஆகவும் விரும்புகின்றனர். இதனிடையே அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் மத்தியில் சாதிய பாகுபாடு நிலவுவதாக அவ்வப்போது சில குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வந்தன. இதனையடுத்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம், பிரவுன் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சாதிய பாகுபாடு இருக்கக்கூடாது எனவும் அவற்றை தடை செய்வதாகவும் நிர்வாகங்கள் அறிவித்திருந்தன.

Seattle becomes first US city to ban caste based discrimination

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் அமெரிக்காவின் சியாட்டில் மாகாணத்தில் சாதிய பாகுபாட்டை தடை செய்யவேண்டும் என அங்கிருக்கும் இந்திய மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இந்த சூழ்நிலையில்  சியாட்டில் நகர கவுன்சிலின் உறுப்பினரான ஷாமா சாவந்த் சாதிய பாகுபாட்டை தடை செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியிருந்தார். அதில், சுமார் 3000 ஆண்டுகளாக சாதிய கொடுமைகள் காரணமாக பிற்படுத்தப்பட்டோர் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும் அவர்களுக்கு சம உரிமை வழங்கிட இந்த தீர்மானம் சட்டமாக்கப்பட வேண்டும் எனவும் உணர்ச்சிப்பூர்வமாக குறிப்பிட்டிருந்தார்.

Seattle becomes first US city to ban caste based discrimination

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் ஷாமா சாவந்த் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் சாதிய பாகுபாட்டை தடை செய்ய ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் இது சட்டமாக இயற்றப்பட இருக்கிறது. இதன்மூலம், சியாட்டிலில் வசித்துவரும் பிற்படுத்தப்பட்ட இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், இனம், மொழி, நிறம், பாலினம், சாதி மற்றும் தேசியம் ஆகியவற்றின்படி பாகுபாடு காட்டுவதை இந்த சட்டம் தடை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seattle becomes first US city to ban caste based discrimination

Images are subject to © copyright to their respective owners.

இதுகுறித்து ஷாமா சாவந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,"தற்போது இது அதிகாரப்பூர்வமாகியுள்ளது. அமெரிக்காவிலேயே முதன்முறையாக சியாட்டிலில் சாதிய பாகுபாட்டுக்கு எதிராக சட்டம் இயற்றி வரலாற்று வெற்றியை படைத்திருக்கிறோம். இப்போது இந்த வெற்றியை நாடு முழுவதும் பரப்ப ஒரு இயக்கத்தை உருவாக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இது அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

Also Read | "இந்தியாவில் எந்த நேரத்திலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம்".. எச்சரிக்கும் நிபுணர்.. இந்த இடங்கள்ல தான் வாய்ப்பு அதிகமாம்..!

SEATTLE, FIRST US CITY, SEATTLE BANS CASTE DISCRIMINATION, SEATTLE BECOMES FIRST US CITY

மற்ற செய்திகள்