'ரூல்ஸ் ரூல்ஸ் தான்!'.. அது யாரா இருந்தாலும் சரி!.. ‘கொரோனா’ பாதுகாப்பு விதிமீறலால் ‘ஸ்காட்லாந்து’ பெண் எம்.பிக்கு நேர்ந்த கதி!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்புடன் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்டதாக கூறி ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி முதல் செப்டம்பர் 29-ம் தேதி வரையிலான கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியது தொடர்பாகவும், மேலும் அந்த நேரத்தில் பொறுப்பற்ற தன்மையுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொண்டதாகவும் 60 வயதான ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சுமார் 200 மைல்கள் தொலைவுக்கு அவருடன் பயணம் மேற்கொண்டதாக அவர் மீது அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய அந்த செப்டம்பர் மாதம் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா உறுதிசெய்யப்பட்டது தனக்கு தெரிந்த பின்னர் அவர் கிளாஸ்கோவில் அமைந்திருக்கும் தனது குடியிருப்புக்கு கிளம்பினார்.
அதுமட்டுமல்லாமல் சோதனை முடிவு நிலுவையில் இருக்கும் இந்த நிலையில் அவர் அங்குள்ள அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவற்றுக்கு தொடர்ச்சியாக சென்று வந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் ஸ்காட்லாந்து போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் முடிவில் ஸ்காட்லாந்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
மற்ற செய்திகள்