VIDEO : '500' அடி உயர பாலத்தில்... 'செல்ஃபி', 'ரன்னிங்' என இளைஞர்களின் 'ரிஸ்க்' சாகசம்... "பாத்த எங்களுக்கே வயித்துக்குள்ள உருண்ட உருளுதுயா"... 'திகில்' கிளப்பும் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்காட்லாந்து நாட்டின் ஃபோர்த் நதியில் கட்டப்பட்டுள்ள தொங்கு பாலம் ஒன்று மிகவும் பிரபலமானது. இந்த பாலத்தின் மத்தியில் அமைந்துள்ள பிரம்மாண்ட தூணில் இருந்து பாலத்தின் இருபுரத்தையும் இணைக்கும் வகையில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுமார் 500 அடி உயரமுள்ள அந்த பாலத்தின் மீது ஆடம் லாக் என்ற 19 வயது இளைஞர் உட்பட அவரது நண்பர்கள் சிலர் ஏற முயன்றனர். இதில், ஆடம் லாக் என்ற அந்த இளைஞர் ஆபத்தான அந்த தடத்தில் இருபக்கமுள்ள கம்பிகளை மட்டும் பிடித்துக் கொண்டு ஏறி உச்சிக்கு சென்றார். அதில் சில செல்ஃபிகளை எடுத்துக் கொண்ட அந்த இளைஞர், மீண்டும் கீழிறங்கும் போது, மிகவும் வேகமாக ஓட்டம் பிடித்த படியே கீழே இறங்கி வந்தார். மிகவும் அபாயமான கட்டத்தில் கையை எடுத்துக் கொண்டு அவர் வேகமாக கீழே இறங்கியது வீடியோ பார்ப்பரவர்களை பதற வைத்தது.
இறுதியில், கீழிறங்கிய அந்த இளைஞரை அவருக்காக காத்திருந்த போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். குற்றமற்ற மற்றும் பொறுப்பற்ற நடத்தை காரணமாக அவரை போலீசார் கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS