'இது என்னோட வாழ்நாள் சாதனை...' அனைத்து பெண்களுக்கும் சானிட்டரி நாப்கின்கள் இலவசம்...! - உலகிலேயே முதன்முறையாக அறிவித்த நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்காட்லாந்தில் பெண்களின் மாதவிடாய் காலத்தில் தேவைப்படும் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டாம்பொன் போன்றவற்றை இலவசமாக வழங்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது
ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினரான மோனிகா லெனான் பெண்களுக்கான ஒரு சிறப்பு மசோதாவை முன்மொழிந்துள்ளார். அதாவது பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய அனைத்து சுகாதார தயாரிப்புகளான சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டாம்பொன்களை அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் இலவசமாக வழங்கும் சட்டத்தை முன்மொழிந்தார்.
மேலும் இந்த மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் ஒருமனதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்காரணமாக பெண்களுக்கான சுகாதார தயாரிப்புகளை முற்றிலும் இலவசமாக்கிய உலகின் முதல் நாடு என்ற பெயரை ஸ்காட்லாந்து பெற்றுள்ளது.
இதுகுறித்து கூறிய ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மோனிகா லெனான், 'பெண்களுக்கு தேவையான சுகாதார தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் உலகின் முதல் நாடாக ஸ்காட்லாந்து இருக்கும். இது என் வாழ்நாளில் மிகப்பெரிய சாதனையாக எண்ணுகிறேன் மேலும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் இந்த திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்' எனவும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்