இறந்த பன்றிகளுக்கு நடந்த சோதனை.. மீண்டும் உயிர் கொடுத்த விஞ்ஞானிகள்??.. ஆய்வில் நடந்த அதிசயம்.. "மனிதர்களுக்கும் இத பண்ண முடியுமா??"
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த உலகில், அவ்வப்போது நாம் நினைத்து கூட பார்க்க முடியாத ஏராளமான விஷயங்கள் தொடர்பாக தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியாகி, மக்களை மிரள வைக்கவும் செய்யும்.
Also Read | திருநங்கை - திருநம்பி ஜோடிக்கு பிறந்த குழந்தை.. வியப்பில் ஆழ்ந்த மக்கள்.. சாத்தியமானது எப்படி??
அப்படி இருக்கும் நிலையில், அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி குழு ஒன்று, பன்றிகளை வைத்து நடத்திய சோதனை தொடர்பான செய்தி, தற்போது வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, பன்றிகளை வைத்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்தச் செய்தியின் படி, பன்றிகளுக்கு செயற்கை முறையில் மாரடைப்பை விஞ்ஞானிகள் தூண்டி விட்டுள்ளனர். இதன் காரணமாக, அந்த பன்றிகள் இயக்கம் நின்று போகவே, அப்படி இருந்த பன்றிகளை சுமார் ஒரு மணி நேரம் எதுவும் செய்யாமல், இறந்து போன நிலையில் வைத்துள்ளனர். அதன் பின்னர், அந்த பன்றிகளின் சொந்த இரத்தத்தை எடுத்து, ஒரு திரவத்துடன் கலந்து பன்றிகளின் உடம்புகளில் விஞ்ஞானிகள் பம்ப் செய்துள்ளனர்.
இந்த செயல்முறைக்கு மத்தியில், ரத்த அணுக்களுக்கு ஆக்சிஜனை சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் செலுத்தப்பட, ரத்தம் கட்டியாகுவதை தடுத்து, செல்களை பாதுகாக்க மருந்துகளும் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, சுமார் ஆறு மணி நேரம் சோதனைக்கு பின் காத்திருந்த விஞ்ஞானிகள், பன்றிகளின் இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் இருந்த செல்கள் செயல்பட ஆரம்பித்ததை கண்டு மிரண்டு போயுள்ளனர். அது மட்டுமில்லாமல், பன்றியின் தலைகளின் அசைவு இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. அறிவியல் உலகில், இந்த சோதனை சமீபத்திய ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஒரு அறிவியல் அற்புதம் என்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.
பன்றிகளுக்கு தற்போது செயல்படுத்திய முறையை மனிதர்களுக்கும் செலுத்தி, இறந்த செல்களை உயிர்ப்பிக்க வழி செய்வது என்பது முடியுமா என்ற ஒரு கேள்வியும் ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், அதே வேளையில் இந்த செயல்முறை மூலம் இறந்த மனிதர்களை செயல்படுத்த வைத்தாலும், அவர்கள் வழக்கம் போல இல்லாமல் கோமாவில் இருந்த ஒரு மனிதரைப் போல தான் இருக்க வாய்ப்பு உள்ளதாக சில விஞ்ஞானிகள் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இறந்த பன்றியையே உயிருடன் இயங்க வைத்தது தொடர்பான ஆய்வு, பலரையும் உறைந்து போக வைத்துள்ளது. இது தொடர்பாக, அடுத்த கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்