"ஒரு செகண்ட்-ல பூமிய விழுங்கிடும்..நெனச்சத விட 500 மடங்கு பெருசு".. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த புதிய Black Hole.. திடுக்கிட வைக்கும் தகவல்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரம்மாண்ட கருந்துளை (Black Hole) ஒன்றை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விண்வெளி எப்போதுமே பல விவரிக்க முடியாத அற்புதங்களையும் விசித்திர குணங்களையும் கொண்டது. அறிவியல் வளர்ச்சியில் மனிதகுலம் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தியிருந்தாலும் விண்வெளியின் சில மர்மங்கள் இன்னும் விடுவிக்கப்படாமலேயே இருக்கின்றன. அவற்றுள் ஒன்று தான் இந்த பிளாக் ஹோல். அதீத எடை கொண்டிருக்கும் இந்த துளைகள், அதன் அருகே செல்லும் அனைத்து பொருட்களையும் கணப்பொழுதில் உள்ளிழுத்துக்கொள்ளும். ஆனால், அதன் உள்ளே என்ன இருக்கிறது? என்பது இன்னும் கேள்வியாகவே இருக்கிறது. நமது பால்வழி அண்டத்தில் கருந்துளைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்திருப்பது நமது பால்வழி அண்டத்தில் இருப்பதை விட 500 மடங்கு பெரியதாகும். இதனாலேயே இது விண்வெளி ஆராய்ச்சியில் பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.
9 பில்லியன் ஆண்டுகள்
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (ANU) வானியலாளர்கள் தலைமையிலான சர்வதேச குழுவால் சமீபத்தில் இந்த பிளாக் ஹோல் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 9 பில்லியன் ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் கருந்துளை இதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நமது விண்மீன் மண்டலத்திலிருந்து வரும் அனைத்து ஒளியையும் விட 7,000 மடங்கு பிரகாசமாக இந்த கருந்துளை பிரகாசமாக இருப்பதாக கணக்கிட்டுள்ளனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.
முன்னணி ஆராய்ச்சியாளர்களான டாக்டர் கிறிஸ்டோபர் ஓன்கென் மற்றும் குழுவை வழிநடத்திய இணை ஆசிரியர் கிறிஸ்டியன் வுல்ஃப் ஆகியோர் இதுபற்றி பேசுகையில்," கடந்த 50 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற ஒன்றை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். ஆனால், இந்த பிரம்மாண்ட பிரகாசிக்கும் கருந்துளையை கண்டறிய அவர்கள் தவறிவிட்டனர். இந்த கருந்துளை ஒரு வினாடிக்கு பூமி போன்ற ஒரு கிரகத்தையே ஒரு நொடியில் உள்ளிழுத்துக்கொள்ளும் அளவு சக்திகொண்டது" என்றனர்.
இந்த கருந்துளையின் எடை 3 பில்லியன் சூரியங்களின் எடைக்கு சமமாகும் எனத் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதுபோன்ற அளவுள்ள பிற கருந்துளைகள் வளர்வதை பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதாக கூறுகின்றனர். இரு கேலக்சிகள் ஒன்றோடு ஒன்று மோதியதால் இது உருவாகியிருக்கலாமா? என்ற கோணத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் நிபுணர்கள்.
விண்வெளி ஆராய்ச்சியில் இந்த கருந்துளை கண்டறியப்பட்டது புதிய மைல் கல்லாக இருக்கும் என கருதுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
மற்ற செய்திகள்